பணம் ! கவிஞர் இரா .இரவி !

பணம் !   கவிஞர் இரா .இரவி !

நல்லவனையும் கெட்டவனாக்கும் !
நல்லவர்களே கவனம் !

கெட்டவனை கொடூரனாக்கும்
கெட்டவனே  கவனம் !

அளவற்ற ஆசை பிறக்கும் !
அறிவையும் இழக்க வைக்கும் !

நாயிடம் இருந்தாலும் மதிப்பார்கள் !
நாயினும் கேவலமாக மாறுவார்கள் !

முட்டாளுக்கும் மதிப்பைத் தரும் !
மூடனையும் தலைவனாக்கும் !

மனசாட்சி அடகு போகும் !
மனம் மாறி  பொய்யனாககும்  !

மதிக்காதோரை மதிப்பது இல்லை !
மதிப்போரின் வசதியை  உயர்த்தும் !

குறுக்கு வழியில் முடித்து வைக்கும் !
குடும்பத்திலும் குழப்பம் உண்டாக்கும் !

வசதியின் உச்சம் காட்டும் !
பிடிபட்டால் சிறைச்சாலையும் காட்டும் !

அரசாங்கத்தால்  அச்சடிக்கப்பட்ட தாள் !
அவ்வளவுதான் அடிமை ஆகாதீர்கள் !

கருத்துகள்