படித்ததில் பிடித்தது ! மகிழ்ச்சி மந்திரம் ! நூல் ஆசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .

படித்ததில் பிடித்தது !


மகிழ்ச்சி மந்திரம் ! 
நூல் ஆசிரியர்  தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் .
நூல் விமர்சனம் கவிஞர் புதுயுகன் லண்டன்  . 

.வணக்கம்!

புகழ்பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக தமிழ்த்தேனி அவர்கள்  எழுதிய நூல் விமர்சன நூல்  'மகிழ்ச்சி மந்திரம்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது அறிந்து மிக மகிழ்ச்சி.  நூலினை இணைக்கும் நூலான 'மகிழ்ச்சி' என்ற மந்திரத்தை அருமையாக, எல்லோரும் ஏற்கும்படியாக ஆசிரியர் எடுத்தாண்டிருப்பது சிறப்பு.

நூலில் அவ்வை, பரமஹம்சர், பாரதிதாசன், ரசிகமணி, பாரதியார், கல்கி, வாரியார், கி.வா. ஜகன்னாதன், புதுமைப்பித்தன், கண்ணதாசன் போன்ற மேதைகளைப் பற்றி, அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றியும் சுவையாக கூறி இருக்கிறீர்கள். 

இதே நூலில், எனது 'கதவு இல்லாத கருவூலம்', 'மடித்து வைத்த வானம்' பற்றியும், குறிப்புகளும் ஒரு கட்டுரையாக வந்திருக்கிறது என்பதை அறிந்து மிக மகிழ்ந்தேன்.  நூலாசிரியர் தமிழ்த்தேனீ  ஐயா அவர்கட்கு எனது நன்றி. பெரியதோர் சங்கப் பலகையில் அமர்த்தியதற்கு எனது பணிவான அங்கீகாரங்கள் .

நூலைப் பற்றிய நல்லதோர் அறிமுகம் இனிய நண்பர் கவிஞர் இரா இரவி அவர்கள் தந்திருந்தார்.

அவரது 'புத்தகம் போற்றுதும்' அணிந்துரையில் தங்களது நூலைப் பற்றியும் முனைவர் நிர்மலா மோகன் அம்மா அவர்களின் நூலைப் பற்றியும் படித்தறிந்து மகிழ்ந்தேன். அவர்களிடம் தொலைபேசியதில்லை எனினும் இந்தச் சந்தர்பத்தில் அறிமுக வணக்கத்தை தெரிவித்து மகிழ்கிறேன்.

நூறுக்கும் மேலான அரிய தமிழ்ப் புத்தகங்கள்! தங்கள் இருவரது தமிழ்ப்பணிகள்  பனிச்சூரிய அழகும், அதன் இதமும்.
நல்ல இலக்கிய இரசனையின் பொருட்டு அவை தொடர வேண்டும் என்பது என் அவா.

பேரன்புடன்
புதுயுகன் 
 வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. பக்கங்கள் : 248, விலை : ரூ. 150.http://www.eraeravi.com/home/detail.php?id=413&cat=nl

கருத்துகள்