கேரளாவின் கோர முகம் ! கவிஞர் இரா .இரவி !
இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் கேரளா என்ற பெருமைக்கு சிறுமை சேர்க்கும் வண்ணம் நடந்து கொள்கின்றனர் .திருந்த வேண்டும் .முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பல நீதி மன்றங்கள் சொன்னபோதும் கேட்காமல் பலவீனம் என்று பல்லவி பாடுவதை நிறுத்துங்கள் .அணை தொடர்பாக தவறாகப் புரிந்து கொண்டு தமிழரை பகையாக நினைத்து ,
தமிழை வெறுக்கும் விதமாக .கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் தமிழ் பள்ளி ஆசிரியர்கள் 1300 பேரை திடீர் பணி நீக்கம் செய்து ஆணை பிறப்பித்து உள்ளனர் .
இன்று தி இந்து தமிழ் நாளிதழில் செய்தி வந்துள்ளது .
மனிதாபிமானமற்ற செயல் .உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை அவமதிக்கும் செயல் .1300 பேரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயல் .தமிழ் படிக்கும் மாணவர்களின் தமிழ் கல்வியை அழிக்கும் செயல் .உடனடியாக பணி நீக்க ஆணையை ரத்து செய்து பணி வழங்க முன் வர வேண்டும் . படித்தவர்கள் என்ற பண்போடு நடந்து கொள்ள வேண்டும் .ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பதை மனதில் கொண்டு நடந்து கொள்ளுங்கள் .நீங்கள் உண்ணும் காய்கறி அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .இங்குள்ள பேராயக் கட்சியினர் தங்களுக்குள் உள்ள குழுச்சண்டை விடுத்து உம்மன் சாண்டிக்கு நல்ல புத்தி சொல்லுங்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக