தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை !

 தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை !

புகைப்படங்கள் இனிய நண்பர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணத்தில்.

தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மதுரை  தன் முன்னேற்றப் பயிலரங்கம் சிபி கல்லூரியில் நடைபெற்றது . 

தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .இராஜராஜன் வரவேற்றார் .செயலர்  கவிஞர் இரா .இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார்  ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை உரையாற்றினார் .

கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,தன்னம்பிக்கை கவிதை வாதித்தார் . திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,முத்துக்கிருஷ்ணன்  ஜானகி ராமன், சம்பத் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .

.தன்னம்பிக்கை பயிற்சியாளர்  முனைவர் திரு தமிழ் இனியன் வானம் வசப்படும் என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் . நேரு அவர்கள் மின்தூக்கியில்(  லிப்ட் )சென்றபோது மின் தடை ஏற்பட்டு  20 நிமிடங்கள் உள்ளேயே இருக்க நேரிட்டது .நேரு திட்டுவார் என்று அதிகாரிகள் பயந்தனர் .ஆனால் நேரு சிரித்த முகத்துடன்  மின்தூக்கியில் நூல்கள் வைத்து இருந்தால் படித்து இருப்பேன் .  20 நிமிடங்கள்  வீணாகி இருக்காது என்றார் .

நெப்போலியன் விரும்பியதும் நூல்களே  .அறிஞர் அண்ணா விரும்பியதும் நூல்களே ஹிட்லர் விரும்பியதும் நூல்களே.இப்படி பலரின் நூல் ஆர்வத்தை விளக்கி சொல்லி வாசித்தல் சுவாசித்தல் போல இருக்க வேண்டும்  என்று விளக்கி கூறினார். ஜெகநேசன் ,கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .திரு. இராமன் நன்றி  கூறினார்  .

கருத்துகள்