சதுரங்க வேட்டை ! திரைப்படம் விளம்பர வாசகம் ! கவிஞர் இரா .இரவி !

சதுரங்க வேட்டை  ! திரைப்படம் விளம்பர வாசகம் ! 

கவிஞர் இரா .இரவி !

" நல்லவனா வாழ்ந்தால் இறந்த பின் சொர்க்கம் போகலாம் . கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கம் ." 

இப்படி ஒரு வசனம் பல்வேறு தொலைக்காட்சியில் சதுரங்க வேட்டை  ! திரைப்படம் விளம்பரத்தில் வசனம்  வருகின்றது. தினந்தோறும் பல முறை  ஒலிக்கின்றது .ஏற்கனேவே நாட்டில் நல்லவர் எண்ணிக்கை   குறைந்து , கெட்டவர் எண்ணிக்கை பெருகி  வருகிறது .இது போன்ற வசனங்கள்  கெட்டவர் எண்ணிக்கை  இன்னும் பெருக வழி வகுத்து விடும் .எதிர்மறை சிந்தனை விதைத்து வருகின்றது .தந்தை பெரியார் சொன்னது போல ஒரு சில நல்ல படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் தமிழரைப் பிடித்த நோயாகவே உள்ளன .
படைப்பு என்பதும் இலக்கியம் என்பதும் மனிதனை சீர் படுத்தும் விதமாகவே இருக்க வேண்டும் .மனிதனுக்கு நெறி புகட்டும் விதமாகவே இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு படைப்பாளியும் உணர வேண்டும் .சொர்க்கம் நரகம் என்பதே கற்பிக்கப்பட்ட  கற்பனை .இறந்ததும் ஒருவரை எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம் எனவே இந்த உடல் மேலே சொர்க்கம் நரகம் செல்லும்  என்பதே மூட நம்பிக்கை .மனிதனுக்கு மட்டுமே உள்ள பகுத்தறிவை தயவுசெய்து பயன் படுத்துங்கள் .இதைதான் தந்தை பெரியார் தன் இறுதி மூச்சு உள்ள  வரை   உரைத்தார் .உணருங்கள் .
 
மனிதன் மனசாட்சியுடன் ,மனிதநேயத்துடன், நெறியுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் படைப்புகளாக படைப்பாளிகள் படைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் . 
.

கருத்துகள்