ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

27.7.2014 அன்று சென்னையில் நடந்த மின்மினி இதழ் 5 ஆம் ஆண்டு விழாவில்  கவிப்பேரரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பறவைகள் பற்றி இயற்கை பற்றி ஹைக்கூ வடியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள் .அதன் விளைவு.


ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

வண்ணம் கருப்பு 
எண்ணம் இனிப்பு 
காகம் !  

அழகு கருப்பு 
அனைவரின் விருப்பு 
காகம் !  

கூர்மை அலகு
கூர்ந்து பார்த்தால் அழகு 
காகம் !  
.
கரைந்து உண்ணும் 
இரக்க உள்ளம் 
காகம் !  

கூடி வாழும் 
கோடி இனம் 
காகம் !  

ஒன்றுக்கு இடர் எனில் 
அனைத்தும் கூடி விடும் 
காகம் !  

அழைத்தால் வரும் 
அன்புப் பறவை 
காகம் !  

பாட்டி கதையில் 
பகையாளி 
காகம் !  

பானையில் கற்கள் இட்டு 
தாகம் தனித்த அறிவாளி 
காகம் !  

குயிலிடம் 
வாடகை வாங்காத தாய் 
காகம் !  

இரண்டும் உண்ணும் 
சைவம் அசைவம் 
காகம் !

பறக்காமல்  நடக்காமல் பயணிக்கும் 
பசுவின் மீது அமர்ந்து 
காகம் !

பார்க்கின்றனர் பலர் 
கடவுளாக முன்னோராக 
காகம் !



நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்