ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !


பறவைகளில் சிறியது 
பரவசம் தருவது 
குருவி !

சிலப்பதிகாரம் நற்றிணை குறுந்தொகை 
இலக்கியங்களில்  இடம் பிடித்த 
குருவி !

தன்னுயிருக்கு மேலாக 
தன் குஞ்சுகள் உயிர் காக்கும்
குருவி !

இரை ஊட்டி காக்கும் 
இனிய குஞ்சுகளை 
குருவி !
 
மிக இனிமை  
எழுப்பும் ஒலி
குருவி !

கூடு கட்டி வாழும் 
கூடி வாழும் 
குருவி !

சிட்டுகளை 
நினைவூட்டும் 
குருவி !

குழந்தைகள் பார்த்தால்
குதூகலம்  பெறும் 
குருவி !

பறப்பது அழகு 
நடப்பது அழகு 
குருவி !

மெல்லிய தேகம் 
பறக்கும் வானம் 
குருவி !

மூன்றெலுத்து   முத்தாய்ப்பு 
முத்தமிட்டுக் கொள்ளும் 
குருவி !

உழைப்பால் உருவாக்கும் 
உன்னத கூடு 
குருவி !

அருகே வாழ்ந்தது 
தூரம் சென்றது 
குருவி !

வண்ண சிறகு 
ரசிக்க அழகு 
குருவி !

உலகமயத்தால் 
விவசாயியோடு பாதித்தது 
குருவி !

அலைபேசி கோபுரங்களால் 
அழிந்து வருகின்றது 
குருவி !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்