முது பெரும் எழுத்தாளர் திரு . ஜெயகாந்தன் அவர்களின் நேர்முகம குறித்து ! கவிஞர் இரா .இரவி !

முது பெரும் எழுத்தாளர் திரு .  ஜெயகாந்தன்  அவர்களின் நேர்முகம குறித்து ! 

  கவிஞர் இரா .இரவி !

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.24.7.2014 தி தமிழ் இந்து நாளிதழில் முது பெரும் எழுத்தாளர் திரு .  ஜெயகாந்தன்  அவர்களின் நேர்முகம படித்தேன் .

அவர் மீது மதிப்பும் , மரியாதையும் வைத்துள்ள எனக்கு ஒருகேள்விக்கு  அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது .

.கேள்வி ;இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ( தமிழில் )

பதில் ;படிக்கிற மாதிரி எதுவும் இல்லை .அதாவது தமிழில்

மூத்த படைப்பாளி இளைய படைப்பாளிகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும் .  

முது பெரும் எழுத்தாளர்கள்  வல்லிக் கண்ணன் ,தி க .சி போன்றவர்கள் வளரும் எழுத்தாளர்களை மனம் திறந்து பாராட்டி வந்தனர் .இன்று திருவாளர்கள் வெ.இறையன்பு ,எஸ் .இராம கிருஷ்ணன் ,இந்திரா சௌந்தரராஜன் ,  சாகித்ய அகதமி விருது பெற்ற சு .வெங்கடேசன் உள்ளிட்ட பலர் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் .இவற்றில் படிக்க எதுவும் இல்லையா ? உண்மை பேச வேண்டும் அவரே கடைசியாக நேர்முகத்தில் பாரதி வரிகள் சொல்லி முடித்துள்ளார் . ஊருக்கு நல்லது  சொல்வேன் .உண்மை சொல்வேன்.என்று .

தமிழில் கதை ,நாவல் ,கட்டுரை  ,மரபுக்கவிதை ,புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என்று பல வடிவங்களில் பல நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன .படிக்கிற மாதிரி எதுவும் இல்லை என்று சொல்லி சமகால படைப்பாளிகள்  அனைவரையும்  காயப்படுத்தியது சரியா ? 

ஆணவமான கர்வமான பதிலை  தவிர்த்திடுங்கள் .பல ஆண்டுகளாக
முது பெரும் எழுத்தாளர் திரு .  ஜெயகாந்தன்  அவர்கள் 
எழுதுவதையே  நிறுத்தி  விட்டார்  .புதிய படைப்பு எதுவும் வரவில்லை .ஆனால் மற்ற எழுத்தாளர்கள்  பலர் இறுதி மூச்சு உள்ளவரை எழுதி இருக்கின்றனர் .இவர் தமிழில் புதிதாக   தற்போது எதுவும் படைப்பதில்லை  .ஆனால் படைத்தவர்கள் மனம் புண் படும்படிகருத்து சொல்லி உள்ளார் .

தரமான படைப்புகளில்  தமிழில் ஏராளம் உள்ளன .படிக்க விருப்பம் இல்லை என்று சொல்லுங்கள் .நேரம் இல்லை என்று சொல்லுங்கள் அதை விடுத்து '  படிக்கிற மாதிரி எதுவும் இல்லை .அதாவது தமிழில்
என்று சொல்லியது 'ஒட்டு மொத்த தமிழ்ப் படைப்பாளிகள அனைவரையும் மட்டம் தட்டும்  எண்ணம் .

நீங்கள் எழுதுவதை நிறுத்திக் கொண்டது போல பேசுவதையும் நிறுத்திக் கொள்வது நன்று .


.

கருத்துகள்