அழைப்பிதழ் ! மின் அஞ்சலில் வந்ததது

அழைப்பிதழ் !  மின் அஞ்சலில் வந்ததது
மதிப்பிற்குரியவருக்கு,

சமம் குடிமக்கள் இயக்கத்தின் வாழ்த்துகளும் வணக்கங்களும். தொடர்ந்து சமம் குடிமக்கள் இயக்கம் ஆற்றிவரும் மக்கள் பணிக்கு தாங்கள் அளித்துவரும் ஒத்துழைப்புக்கு நன்றி.

வரும் 16-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4.30 மணியளவில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலுள்ள அசிசி வளாகத்தில் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எழுதிய "கச்சத்தீவை திரும்பப் பெறமுடியும்" என்ற புத்தகம் வெளியிடப்படவுள்ளது. 

புத்தகத்தை தேசிய மீனவர் பேரவையின் அகில இந்திய தலைவர் திரு இளங்கோ அவர்கள் வெளியிடுகிறார்கள். நாகர்கோவில் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கல்லூரி முதல்வர் திரு சுப்பிரமணியபிள்ளை அவர்கள் முதல் பிரதியினைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

இன்றைக்கு கச்சத்தீவு குறித்து மத்திய அரசின் பாரமுகமும் மாநில அரசின் அக்கறையும் நீங்கள் அறிந்ததே. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. 1983-க்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும் சுடப்பட்டும் உயிரிழந்த தமிழக மீனவர்கள் ஐநூறு பேருக்கும் அதிகம். உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயலிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். கச்சத்தீவை மீண்டும் பெறுவதன் மூலம் மட்டுமே தமிழக மீனவர்களின் உயிரையும், உரிமையையும், உடமையையும் காப்பாற்ற முடியும்.

கச்சத்தீவு மீதான தமிழகத்தின் உரிமை என்ன, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இலங்கைக்கு அது தாரைவார்க்கப்பட்ட நிகழ்வு, அதையொட்டி தலைதூக்கிய சிறுசிறு எதிர்ப்புகள், கொடுத்த நிலப்பரப்பை மீண்டும் பெற இயலுமா? என்ற கேள்விக்கான விளக்கங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இது உண்மையை மட்டும் பேசும் ஒரு வரலாற்றுத் தொகுப்பு.

இந்த புத்தக வெளியீட்டு நிகழ்வை தங்கள் மேன்மைக்குரிய நாளிதழின் நாகர்கோவில் பதிப்பில் இன்றைய நிகழ்ச்சி பகுதியிலும் நிகழ்வு முடிந்த பின்னர் செய்தியாகவும் வெளியிட்டு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிகழ்ச்சி அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி.

அன்புடன்

                                                 வழக்கறிஞர் சி.சே. ராசன்
                                                     மாநில அமைப்பாளர்
                                                சமம் குடிமக்கள் இயக்கம்

கருத்துகள்