என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி ! கவிஞர் இரா .இரவி !

சூரியன் பன்பலை வானொலியில் தந்த தலைப்பு !

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி  !  கவிஞர் இரா .இரவி !

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து !
பயணப்பட்டு பூமிக்கு வருகிறேன் நான் !

என்னை நீங்கள் வரவேற்காவிட்டாலும் !
என்னை நீங்கள்   வீணடிக்காதீர்கள் !

சூரியனின் தயவால் கடலிலிருந்து ஆவியாகி !
சுத்திகரிக்கப்பட்டு  நல்ல தண்ணீராய் வருகிறேன் !

முழுவதுமாக என்னை சேகரித்து   வைத்தால் !
மூன்று தலைமுறைக்கும் பஞ்சம் வராது !

கல்நெஞ்சம் படைத்த கர்னாடகத்திடம் !
கெஞ்ச வேண்டிய அவசியம் இருக்காது !

மரங்கள் துளிர்க்க நான் உதவுகின்றேன் !
நாங்கள் பூமிக்கு வர மரங்கள் உதவுகின்றன !

மரங்கள் வளர்க்க வேண்டியது கடமை !
மரங்களை வெட்டி வீழ்த்துவது மடமை !

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது உண்மை !
சிதறாமல் சேகரித்தால் வருவது வளமை ! 


கருத்துகள்