குளிர்பிரதேசத்தில் அணியும் ஆடையை அணிந்து !
வெப்பபூமியில் விளையாடும் மூடர் சங்கமே !
மட்டைப்பந்து விளையாட்டு சங்கத்தின் குழுவினரா ?
மடையர்கள் கூட்டணி சங்கத்தின் குழுவினரா ?
தமிழர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை !
தமிழர்கள்தான் முடிவு செய்திட வேண்டும் நீங்களல்ல !
அப்பா தாத்தா என்றும் அணியும் எங்கள் வேட்டி !
அடையாளம் தமிழருக்குத் தருவது எங்கள் வேட்டி !
பாட்டன் பூட்டன் பாரம்பரியமாய் அணிந்தது வேட்டி !
பாமரரும் படித்தவரும் பண்பாளரும் அணிவது வேட்டி !
பச்சைத்தமிழர் காமராசர் அய்யா அன்று !
பெரிய ரசியாவிற்கு வேட்டியோடு சென்று வந்தார் !
அனுமதி மறுக்கும் முட்டாள்களே திருந்துங்கள் !
நீதியரசரையும் வழக்கறிஞர்களையும் தடுத்து மடமை !
நீசர்களுக்கு புத்திப் புகட்டுவது நமது கடமை !
அனுமதிக்க மறுத்திட்ட நீதியரசரிடம் மன்னிப்பு கேள் !
அனுமதி உண்டு என்று உங்கள்விதியை திருத்துங்கள் !
தூங்கிக் கொண்டு இருக்கும் புலியைச் சீண்டாதீர்கள் !
தூக்கம் விடுத்து விழித்து எழுந்தால் தாங்கமாட்டீர்கள் !
தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் எங்கள் வேட்டி !
தடை செய்வதற்கு நீங்கள் யாரடா வெட்டி !
வேட்டி என்பது விவேகத்தின் அடையாளம் !
வேட்டிக்குத் தடை விதிப்பது அறிவீனம் !
தமிழ்நாட்டில் வேட்டிக்கு எதிராக விதி வகுக்கும் !
துணிவு உங்கள் சங்கத்திற்கு தந்தது யாரடா ?
தமிழர்களின் உடையை தீர்மானிக்க நீங்கள் யாரடா ?
தமிழகம் விட்டு உங்கள் சங்கத்தை இடம் மாற்றடா !
வேட்டியை தடை செய்யும் முட்டாள் விதியை மாற்று !
வேட்டி ஏற்காவிடின் தமிழகம் விட்டு வீதியை மாற்று !
பண்பாட்டை ஏற்க மறுக்கும் மூட மடையர்களே !
பண்பாடு கற்பிப்பார்கள் உங்களுக்கு தமிழர்களே !
நட்சத்திர விடுதிகளுக்கும் எச்சரிக்கை தருகிறோம் !
நாங்கள் வேட்டி கட்டி வந்தால் வரவேற்று வை வணக்கம்!
வேட்டி அணிந்து வருவோரை இனி தடுத்தால் !
விபரீத விளைவுகள் விளையும் எச்சரிக்கை !
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக