முனைவர் ஆ .மணிவண்ணன் ,M.A.,M.L.,PH.D.,
காவல் உதவி ஆணையர் , மதுரை .
அலைபேசி 91 94432 08519.
"ஆதி இல்லம் "
மனை என் 1 மற்றும் 2 லயன் சிட்டி ,
திருநகர் ,மதுரை..625006.
மின் அஞ்சல் a.m.lastcitizen@gmail. com
ஹைக்கூ கவிதையில் கவிஞர் இரா .ரவி .
ஆசை ஆசை
அவ்வளவு ஆசை
அருந்தமிழை வளர்க்க ...
பொருளாதாரம் கைவிட்டது
தமிழுக்கு ரவி என்ற
புலவனைச் சேர்க்க ..
படித்தது கொஞ்சம் ,
கேட்டது அளவாய் ,
ஆக்கியது ஏராளம் .
காட்டிக் கொள்வது கொஞ்சம்
வெளியிட்டால் எரிமலை
மனதுக்குள் ஆசை .
காதலித்தது
பெண்ணுருவமல்ல
பெண்ணுரிமை .
செலுத்துவது
மண்ணுக்கும் மொழிக்கும்
முதல் மரியாதை .
கொஞ்சம் சொற்கள்
ஆழமான கருத்துக்கள்
நிறைந்த வளம் .
சம்பளத்திற்கு அரசு ஊழியர்
சமூகத்திற்கு மருத்துவர்
தமிழுக்கு பல்கலைவேந்தர் .
அமைதி நடவடிக்கை
எண்ணம் எழுத்து
போர்குணம் .
அள்ள அள்ள
குறையாத அருந்தமிழ்
அட்சயப்பாத்திரம் .
தலைசெருக்கில்லாத
தமிழன்
தழும்பாத நிறைகுடம் .
பிறமொழி கலப்பில்லா
இக்கவிஞன்
பாவேந்தர் வாரிசு .
தமிழ் காதலர்
பகுத்தறிவு விரும்பி
தமஇளங் களப் போராளி .
கண்டிப்பாய் ஓர்நாள்
தமிழ் அரியணை ஏற்றும்
சொதிடமல்ல " உண்மை " .
என்றும் இவர் புகழ்
தமிழுலகம்
பேசும் !பேசும் !
ஆசையுடன் ...ஆ .மணிவண்ணன் .
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக