ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு  ) கவிஞர் இரா .இரவி !

மேகங்களின் மோதல் மின்னல் 
விழிகளின் மோதல் 
காதல் !

புவி ஈர்ப்பு  சக்தியை 
வென்றது 
விழி  ஈர்ப்பு  சக்தி !

பேசாவிட்டாலும் 
பார்வையாலேயே 
பசியாறி விடுகின்றனர் !

நடந்து செல்கையில் 
திரும்பி  ஒரு பார்வை  
அதிர்வலைகள் !

இமைக்காமல் பார்ப்பதில் 
அவளுக்கு நிகர் 
அவளே !

காந்த அலை 
வீசும் 
கண்கள் வலை !

பரவச நிலை 
மிதக்கும் கலை 
காதல் !

பார்க்காததால் 
வரையவில்லை 
இரவிவர்மன் !

காதலன் விழிகளுக்கு 
அவன் காதலி 
பேரழகி !

அடிக்கடி 
சந்திக்கின்றன 
மனஅலைகள் !

சிலையே 
சிலையை ரசித்தது 
கோவிலில் அவள் !
 

கருத்துகள்