ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

கவிச்சூரியன் -19 இதழுக்கு


* மருத்துவ தினம்
* வேலூர் சிப்பாய் எழுச்சி தினம்
* மக்கள் தொகை தினம்
* உலக கல்வி தினம்

  இந்த தலைப்புகளில்  ஹைக்கூ கவிதைகள் மட்டும் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்  kavisooriyan@gmail.com

ஹைக்கூ  ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

உயிர் காக்கும் 
உன்னத மனிதர்கள் 
மருத்துவர்கள் !

நேரம் காலம் பார்க்காமல் 
நேயப்பணி புரிவோர் 
மருத்துவர்கள் !

விடுதலைப் போராட்டம் 
வித்திட்ட முதல் போர் 
வேலூர் சிப்பாய் கலகம் !

வீரம் உணர்த்தியது 
வெள்ளையனுக்கு 
வேலூர் சிப்பாய் கலகம் !

.
பெருகப் பெருக 
பெருகுது பிரச்சனை 
மக்கள் தொகை !

மழலை ஒன்று 
மகத்துவம் இன்று 
ஒன்றே நனி நன்று !

திருடு போகாத சொத்து 
கொடுத்தாலும் குறையாதது 
கல்வி !

உயிருள்ளவரை உடன் இருக்கும் 
மூச்சுள்ளவரை மதிப்புத் தரும் 
கல்வி ! 



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்