உலக சுற்றுச்சுழல் நாள் ! கவிஞர் இரா .இரவி !
சுத்தம் சுகம் தரும் உணர்ந்திடுவோம் !
சுகாதாரம் நலம் தரும் உணர்த்திடுவோம் !
கண்ட இடங்களில் குப்பைக் கொட்டாதிருப்போம்
குப்பைத் தொட்டியில் மட்டும் கொட்டுவோம் !
அயல்நாடுகளில் பேணிடும் சுத்தத்தை நாம் !
நம் நாட்டிலும் பேணிட முன்வர வேண்டும் !
கண்ட இடங்களில் குப்பை போட்டால் !
தண்டத் தொகை வசூலிக்க வழி செய்வோம் !
ஒலி மாசும் தீங்குதான் அறிந்திடுவோம் !
ஒலியின் அளவை குறைத்து வைத்திடுவோம் !
காற்றை மாசு படுத்தும் புகை குறைத்திடுவோம் !
காற்றை சுத்தமாக வைத்திருக்க வகை செய்வோம் !
சீனா பட்டாசு மட்டுமல்ல சிவகாசி பட்டாசும் வேண்டாம் !
சீரான தென்றலை சிதைத்திடும் புகைமாசு வேண்டாம் !
மனிதர்களை மட்டுமல்ல பறவைகளையும் வரவேற்போம் !
மனிதநேயம் மட்டுமல்ல பறவை நேயமும் காப்போம் !
மரம் வளர்ப்பதைக் கடமையாகக் கொள்வோம் !
மழைநீர் சேகரிப்பைக் கட்டயமாக்கிடுவோம் !
நிலத்தை மலடாக்கும் செயற்கை உரங்கள் வேண்டாம் !
நிலத்தை செழிப்பாக்கும் இயற்கை உரங்கள் வேண்டும் !
காடுகளை அழிப்பதை உடன் நிறுத்த வேண்டும் !
காடுகளைக் காத்திட துணை நிற்க வேண்டும் !
நோய் பரப்பும் கிருமிகளை அழித்திடுவோம் !
நோயில்லாப் பெரு வாழ்வு வாழ்ந்திடுவோம் !
பாலீத்தின் பைகளுக்கு முடிவு கட்டுவோம் !
துணிப்பை கொண்டு செல்வதை வழக்கமாக்கிடுவோம் !
வெப்பமயமாதலை தடுத்திட திட்டம் வகுப்போம் !
உலகம்யமாதலை உடன் தடுத்து வைப்போம் !
வளம்மிக்க இயற்கை காடு பசுமை செழிப்பை விட்டு வைப்போம் !
கருத்துகள்
கருத்துரையிடுக