அலகு குத்தி உடலை வருத்தி
வேண்டுதல் வேண்டாம்
கேட்கவில்லை கடவுள் !
பூக்குழி தீ மிதிக்க வேண்டாம்
விபத்து நேரலாம்
கேட்கவில்லை ஆண்டவன் !
ஆடு பலி வேண்டாம்
கோழி பலி வேண்டாம்
கேட்கவில்லை இறைவன் !
மூடநம்பிக்கையில்
நவீனம்
வாஸ்து !
பெயர் மாற்ற வேண்டாம்
செயல் மாற்றம் வேண்டும்
வரும் முன்னேற்றம் !
நல்ல செயல்
நடந்த நேரமோ ?
எமகண்டம் !
கெட்ட செயல்
நடந்த நேரமோ ?
அமிர்தயோகம் !
முட்டாள்தனம்
நல்ல நேரத்தில்
பிரசவ அறுவைசிகிச்சை !
இரண்டு சோதிடர்
இரண்டு விதமாய்
ஒரு ராசிக்கு !
பொருத்தம் பார்த்து
மணமுடித்த இணைகள்
மணவிலக்கு வேண்டி !
தேவையில்லை சாதகப் பொருத்தம்
தேவை மனப்பொருத்தம்
திருமணம் !
விலங்கிற்கு இல்லை
மனிதனுக்கு உண்டு
பயன்படுத்துக பகுத்தறிவு !
.நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக