முயன்றால் முடியாதது எதுவுமில்லை உலகில் !
முயன்று தோற்றாலும் கவலை வேண்டாம் மனதில்!
எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது உண்மை !
என்னால் முடியும் என்று முயல விளையும் நன்மை !
தாழ்வு மனப்பான்மை சாதனைக்குப் பகைமை !
தன்னம்பிக்கை மனப்பான்மை சாதனைக்குத் தோழமை !
சோம்பி இருந்தால் சோதனைகள் வரும் !
விரும்பிச் செய்தால் வெற்றிகள் குவியும் !
நேரத்தை விரயமாக்காமல் பயன்படுத்த வேண்டும் !
நேர நிர்வாகம் என்றும் கடைபிடிக்க வேண்டும் !
உழைப்பதற்கு ஒருபோதும் தயங்க வேண்டாம் !
உழைப்பிற்கான பலன் உறுதியாக வந்துவிடும் !
விதைத்தால்தான் விளைச்சல் வரும் நிலத்தில் !
உழைத்தால்தான் உயர்வு வரும் வாழ்க்கையில் !
உடனே கிடைத்திட வாழ்க்கை திரைப்படமன்று !
ஒவ்வொன்றாய் கிடைக்கும் முயல்வது நன்று !
சிறு தோல்விக்கு சிதைவது என்றும் நன்றன்று !
பேரு வெற்றிக்கு தோல்வியும் பயற்சியன்றோ !
திட்டமிட்டு செயல்பாட்டால் வாழ்க்கை சிறக்கும் !
திசைகள் தோறும் உனக்கு வாசல் திறக்கும் !
மனதின் பயத்தை உடன் அப்புறப்படுத்து !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக