உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .

உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .


மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இரண்டாவது சொற்பொழிவு நடைபெற்றது .உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமை வகித்தார். லண்டனில் இருந்து மதுரைக்கு வருகை தந்த பொறியாளர் ,புலவர் சிவநாதன் , ஆங்கிலேயர் திரு .கெயில் ஆகியோர் திருக்குறளின் பெருமை குறித்து சிறப்புரையாற்றினார்கள் .திருக்குறள் போல ஒரு நூல் உலகில் இல்லை .மேலாண்மை பற்றி ,ஆளுமை பற்றி திருவள்ளுவர் அளவிற்கு உலகில் வேறு எந்த அறிஞரும் சொல்ல வில்லை .மற்ற நூல்கள் தமிழுக்குப்  பெருமை .ஆனால் திருக்குறள் தமிழருக்குப்  பெருமை  என்றார்கள் .

விழாவில் காவல்துறை உதவி ஆணையர் முனைவர் கவிஞர் 
ஆ .மணிவண்ணன் ,மதுரை காமராசர் பல்கலைக் கழக மொழியியல் துறைத் தலைவர் முனைவர் ரேணுகா தேவி ,கவிஞர் இரா .இரவி, முது நிலைத் தமிழாசிரியர் ஞா . சந்திரன் , பட்டிமன்ற நடுவர் கணேசன் ,பேராசிரியர் அம்பை மணிவண்ணன் ,கவிஞர் லக்குமணசாமி  மற்றும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் , கவிஞர்கள்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .
விழாவிற்கான ஏற்பாட்டை  உலகத் தமிழ்ச் சங்கத்தின் பணியாளர்கள்  செய்து இருந்தனர் .


கருத்துகள்