மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முதல் சொற்பொழிவு!
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முதல் சொற்பொழிவு பொற்றாமரை கொண்டான் , புரவலர் ,மருத்துவர் திரு .சீனிவாசன் இல்லத்தில் நடந்தது . உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமை வகித்தார் .மருத்துவர் திரு .சீனிவாசன் முன்னிலை வகித்தார் . இலண்டன் மாநகரில் இருந்து வருகை தந்த இலக்கிய இணையர் திரு .பற்றுமாகரன் ,திருமதி ரீட்டா பற்றுமாகரன் இலக்கிய சொற்பொழிவு தமிழ் வளர்ச்சி குறித்த பயனுள்ள கருத்துக்கள் சொன்னார்கள் .மதுரை இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் இருவரும் தமிழ் வளர்ச்சி குறித்த பயனுள்ள கருத்துரை வழங்கினார்கள் .காவல் துறை உதவி ஆணையர் கவிஞர் ஆ .மணிவண்ணன், மன்னர் திருமலை கல்லூரியின் இயக்குனர் இராஜா கோவிந்தசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள் .புலவர் சங்கர லிங்கம் தொகுத்து வழங்கினார் . பேராசியர் அம்பை மணிவண்ணன் நன்றி கூறினார் .லண்டனில் படித்து வரும் மருத்துவரின் மகள் செல்வி சுவாதி சீனிவாசன் விழாவை புகைப்படம் எடுத்தார்கள் .
மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதிக்கீடு செய்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் ,துடிப்புடன் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் முனைவர்
மூ .இராசாராம் அவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார்கள் .
திருமதி மல்லிகா சீனிவாசன் ,மதுரை காமரசர் பலகலைக் கழகத்தின் மொழியியல் தலைவர் பேராசிரியர் திருமதி ரேணுகா ,மதுரைமணி நாளிதழ் ஆசிரியர் சொ.டயஸ் காந்தி ,கவிஞர் இரா .இரவி , முது நிலைத் தமிழாசிரியர் ( ஒய்வு ) திரு . கணேசன் ,முது நிலைத் தமிழாசிரியர் ஞா சந்திரன் மற்றும் பெருமாட்டி கல்லூரி ,தியாகராசர் கல்லூரி, மேலூர் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் .விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் சுவையான சைவ , அசைவ உணவை பொற்றாமரை கொண்டான் மருத்துவர் திரு .சீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள் .
கருத்துகள்
கருத்துரையிடுக