வேலையில்லா பட்டதாரி படக் குழுவினருக்கு !

வேலையில்லா பட்டதாரி படக் குழுவினருக்கு !

வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் சுவரொட்டி பார்த்தேன். நடிகர் தனுஷ் வாயில் சிகரெட் வைத்து இருப்பது போன்று உள்ளது. இனி வரும்  சுவரொட்டிகளில்   இதனை தவிர்த்திடுங்கள். வேண்டுகோள் இது .வேலையில்லா பட்டதாரி எல்லாம் புகைபிடிப்பார்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது .நல்லதை விட கெட்டது விரைவில் மனதில் பதியும் .இதைப்பார்த்து  சிலர் புகைபிடிக்கப் பழகலாம் .  நடிகர் தனுஷ் நல்ல நடிகர். எளிமையானவர் ,திறமையானவர் பாராட்டுக்கள். உளவியல் ரீதியாக பிடித்த  நடிகர்கள் திரையில் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து பலர் புகைபிடிக்கப் பழகுகின்றனர் .எனது உண்மை .ஏற்கனவே இவரது மாமனார் திரு ரஜினி காந்த திரைபடத்தில் புகைபிடிப்பது கண்டு புகைபிடிக்கப் பழகியோர் பலர் உண்டு .
 
ஒட்டு மொத்த திரைப்படத் துறையினருக்கு புகைபிடிக்கும் மாதிரி, மது குடிக்கும் மாதிரி காட்சிகள் வைக்காதீர்கள் .அப்படியே வைத்தாலும் சுவரொட்டியில் இடம் பெற வேண்டாம் .

கருத்துகள்