கலைமாமணி கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா !

கலைமாமணி  கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு  பணி நிறைவு பாராட்டு விழா !

கலைமாமணி  கு.ஞானசம்பந்தன் அவர்களுக்கு  பணி நிறைவு பாராட்டு விழா 31.5.2014  அன்று காலை மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்றது .விழாவிற்கு சென்று பொன்னாடைப் போர்த்திப் பாராட்டி வந்தேன் .மதுரா கல்லூரி பேராசிரியர் முத்துவேல் ,யாதவர்   கல்லூரி பேராசிரியர் கோபால் ,முனைவர் வா .நேரு  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பாராட்டினார்கள் .அய்யாவின் மாணவி கனிமொழி உரை மிகவும் நெகிழ்ச்சியாக   இருந்தது.
தன் தந்தைக்கு அடுத்தபடியாக தந்தையாக நேசிப்பதாக  கூறினார்  .பிரசவமாகி 4 நாட்களில் கல்லூரிக்கு   தேர்வு எழுத வர முடியாது இருந்தபோது .உன்னால் முடியும் வா என்றார்கள் .அவர் சொன்ன  சொல்லால் வந்து தேர்வு எழுதி வென்றேன் .என்றார்.பலரும் அவரது மனிதநேயத்தை, விருந்தோம்பல்பண்பை ., பேச்சு ஆற்றலை ,  நகைச்சுவை உணர்வை .எழுத்து ஆற்றலை பாராட்டினார்கள் .தமிழ்நாடு அரசு   மகாகவி பாரதி விருது தந்து பாராட்டியதையும்  நினனைவு கூர்ந்தனர் . 


விழா ஏற்பாட்டை திரு .தங்கையா.அவரது மகன் விரிவுரையாளர் த.தமிழரசன் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கரன்கோவில் வே .சங்க்ராம் உள்ளிட்டவர்கள்    செய்து இருந்தனர் . இத்துடன் இணைத்துள்ள "ஓய்வறியாத்  தமிழ் வானம்பாடி " நூல் வெளியிடப்பட்டது .மணி மகுடம் சூட்டி மகிழ்ந்தனர் .கலைமாமணி  கு.ஞானசம்பந்தன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார் .விடை பெறுகிறேன் என்று சொல்வது வழக்கம் இன்று   கல்லூரியில் இருந்து   உண்மையில்  விடை பெறுகிறேன் என்றார்கள் .திருமதி அமுதா ஞானசம்பந்தன்  ,மற்றும் நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவிற்கு வந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கினர்.

கருத்துகள்