நம்பிக்கைச் சிறகுகள் ! கவிஞர் இரா .இரவி !

நம்பிக்கைச் சிறகுகள் ! கவிஞர் இரா .இரவி !

சாதிக்க முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
சாதிக்க முடியும் ! நம்பிக்கை வேண்டும் !

உயர முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
உயர முடியும் !உத்வேகம் வேண்டும் !

வெல்ல முடியுமா ? சந்தேகம் வேண்டாம் !
வெல்ல முடியும் ! வெறி வேண்டும் !

எதிர்மறை சிந்தனை உனக்கு வேண்டாம் !
நேர்மறை சிந்தனை உனக்கு வேண்டும் !

தாழ்வு மனப்பானமையைத் தகர்த்திட வேண்டும் !
தன்னம்பிக்கை நெஞ்சில் நிறுத்திட வேண்டும் !

தோல்வி பயத்தைத்  தள்ளி வைக்கும் வேளை 
தோள்களில் விழும் வெற்றி மாலை !
 
முயன்றால் எதுவும் முடியும் முயன்றிடு !
முயற்சி திருவினையாக்கும் வள்ளுவர் கூற்று !

நேரத்தை மதித்து திட்டமிட்டு உழைத்திடு !
நினைத்து எல்லாம்   நடந்திடும் கண்கூடு !

அக்கினிச் சிறகுகள் எழுதினார் அப்துல்கலாம் !
நம்பிக்கைச்சிறகால் எழுதிட உன்  சாதனை வரலாறு !
.

கருத்துகள்