உடன் நிறுத்துங்கள் ! கவிஞர் இரா .இரவி !

உடன் நிறுத்துங்கள் !   கவிஞர் இரா .இரவி !

இந்தியாவின் பணத்தில் காந்தியடிகள் படம் ! 
இனி அச்சடிப்பதை உடன் நிறுத்துங்கள் !

காந்தியடிகள் இன்று இருந்து இருந்தால் 
கட்டாயம் வருந்திடுவார் என்பது உண்மை !

மது வாங்கத்  தரும் பணத்தில் காந்தியடிகள் !
மடையர்களின் கையூட்டுப் பணத்தில் காந்தியடிகள் !

வரிக்கட்டாத கறுப்புப்  பணத்தில் காந்தியடிகள் !
வஞ்சகர்களின் கொள்ளைப்  பணத்தில் காந்தியடிகள் !

அரசியல்வாதிகளின்  ஊழல் பணத்தில் காந்தியடிகள் !
ஆன்மிகவாதிகளின் ஏமாற்றுவசூல் பணத்தில் காந்தியடிகள் !

தேசப்பிதாவிற்கு மரியாதை செய்வதாக நினைத்து !
தேசப்பிதாவை  அவமரியாதை செய்வதை நிறுத்துக !

கருத்துகள்