பொதிகை மின்னல் மாத இதழ் தந்த தலைப்பு !
வரம் ! கவிஞர் இரா .இரவி !
வரம் என்று
வாங்கியவை
சாபங்களாகி விடுகின்றன !
தவம் இருந்து
பெற்றதாகச் சொன்னார்கள் !
வரம் !
தவமின்றியும்
சிலருக்கு கிடைத்து விடுகின்றன !
வரம் !
பெற்ற வரத்தின்
மதிப்பு அறியாமல்
சாபமாக்கி விடுகின்றனர் !
எழுதும் பேச்சும்
சிலருக்கு வரமாகின்றது !
சிலருக்கு சாபமாகின்றது !
கடவுள்கள் தருவதில்லை
பக்தர்களே எடுத்துக் கொள்கின்றனர் !
வரம் !
உழைப்பால் உயர்ந்தவரை
வரத்தால் உயர்ந்தான்
என்பார்கள் !
சாதனை புரிந்தவர்களை
வரத்தால் வசமானது
என்பார்கள் !
கடவுள் நம்பிக்கை இல்லை
எனவே
வரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை !
உழைப்பு ! உழைப்பு ! உழைப்பு !
உயர்ந்த வரம் உழைப்பு !
வேண்டும் நினைப்பு !
கருத்துகள்
கருத்துரையிடுக