வேண்டாம் பெண்சிசுக்கொலை ! கவிஞர் இரா .இரவி !

வேண்டாம் பெண்சிசுக்கொலை !   கவிஞர் இரா .இரவி !

காட்டுமிராண்டி காலத்தில்  கூட சிசுக்கொலை இல்லை !
கணினியுகத்தில் சிசுக்கொலை நடப்பது மனிதநேயம் இல்லை !

கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் !
கொன்ற உயிரைத் திரும்பத் தர  முடியுமா ?

கருவிலேயே  பெண் என்று தெரிந்திட்டால் உடன் !
கருவிலேயே கதைமுடிக்கும் மடமைக்கு முடிவு கட்டுக !

பிறந்த குழந்தை பெண் என்றால் இரக்கமின்றி !
பச்சிளம்  குழந்தை வாயில் நெல்லிட்டு கொல்லுதல் முறையோ ?

கருத்தம்மா திரைப்படத்தில் இயக்குனர் இமயம் !
கருத்துச் சொன்னதை எளிதில் மறந்திடலாமோ  ?  

மருத்துவர்களாக மாவட்ட ஆட்சியர்களாக வேண்டியவர்களை !
மகள்களை குழந்தையிலேயே  கொல்லுதல் சரியோ ?

பெண் பிறந்தால்   பேதலிக்க வேண்டாம் என்றும் !
பெண் ஆற்றலின் அற்புதம் ! அறிவின் பெட்டகம் !

பெற்றோரை உயிருள்ளவரை நினைப்பவள் பெண் !
பெற்றோரிடம் பாசம் நேசம் காட்டுபவள் பெண் !

மணமானதும் பெற்றோரை மறப்பவன் ஆண் !
மரணம் வரையிலும்  மறக்காதவள் பெண் !  

உலக அளவில் சாதனைகள் புரிபவள்  பெண் !
உலகப்புகழ்ப்பெற்ற அன்னை தெரசா அற்புதப்பெண் !

விண்ணிற்கு விரைந்த கல்பனா சாவ்லா பெண் !
வியத்தகு சாதனைகள் நிகழ்த்துபவள் பெண் !

ஆணை விட எதிலும் குறைந்தவள் அல்ல பெண் !
ஆணை விட ஆற்றலில் சிறந்தவள்   பெண் !

சிந்தித்து செயல்படுவதில் சிகரமானவள் பெண் !
சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்புத் தருபவள்  பெண் !
.
மகன் உலகிற்கு வரக் காரணமானவள் பெண் !
மகிழ்ச்சியை நீர் வீழ்ச்சியாக நல்குபவள் பெண் !

மகளாக மட்டும் பெண் வேண்டாமென்பது  முறையோ  ?
மகனாகவே அனைவரும் பெற்றால் மருமகள் கிடைக்குமா ?

பெற்று வளர்த்தவர்களுக்குத்  தெரியும் மகளின் பாசம் !
பெற்று வளர்க்காதவர்களுக்குத்  தெரியாது  மகளின் பாசம் !

பெண் குழந்தையை எவரும் வெறுக்காதீர்கள் !
பெண் குழந்தையை  அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள் !

பெண் பிறந்தால் துன்பம் என்பது மூட நம்பிக்கை !
பெண்  பிறந்தால் இன்பம்  என்பது நமது நம்பிக்கை !

இழந்த உயிர்கள் போதும் இனி ஒரு உயிரையும் !
இழக்காமல் பெண் குழந்தைகளைப்   பேணிக்காப்போம் !

கருத்துகள்