படித்ததில் பிடித்தது ! நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம் நூலின் தலைப்பு:இடைவெளி அணிந்துரை:முனைவர் ச.சந்திரா
நூலாசிரியர்:கவிஞர் பொன்.விக்ரம்
நூலின் தலைப்பு:இடைவெளி
அணிந்துரை:முனைவர் ச.சந்திரா
கோபுர நுழைவாயில்:
இதிகாசகாலம் முதல் இன்றுவரை காலத்தின் சுழலில்
அகப்பட்டு அழியாதுநிற்கின்றவை நட்பு- காதல் என்ற இரு நிலைபேறு எனலாம். இவைஇரண்டினையும் முத்தும் பவளமுமாக
விரவித்தொடுத்த மாலையாகஇடைவெளி என்னும்
தலைப்பில் பொன்.விக்ரம் கவிதை நூல்படைத்துள்ளார்.
தேசங்களுக்கான இடைவெளியை எல்லைக்கோடுகள்
நிர்ணயிக்கின்றன!வாகனங்களுக்கி டையேயான இடைவெளி விதியைமுடிவு செய்கின்றது!தலைமுறை இடைவெளியோ தகராறுகளை வெளிக்கொணர்கின்றனஇன்றைய இளைஞர்களின் வாழ்வைத் தீர்மானம்
செய்வதும் இடைவெளிகளே!நட்பிற்கும் காதலிற்குமான இடைவெளியே இளமைப்பருவ வாழ்வியலைப் புரட்டிப்போடும் ஒன்றாக உள்ளது என்பதனையே இந்நூல்சொல்லவருகின்றது!
நட்பு என்னும் கடல் தாண்டித்தான் காதல் என்னும் தீவை அடையமுடியும் என்ற செய்திதான் அழுத்தம் திருத்தமாக
பக்கத்திற்குப்பக்கம்பொன்.விக்ரம் அவர்களால்
கூறப்பட்டுள்ளது!அதீத அன்பினைப் பற்றியகவிதைகள் அதிகமாய் இருப்பினும் உடலியல் சாராமல்,உளவியல் சார்ந்து,சிறிதுகூட விரசமின்றி இடைவெளி என்னும் நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது!அன்பியலோடு அழகியல் சார்ந்த உணர்தலும் சேர்த்து கவிதை நூல்கள்வெளிவரும் இன்றைய சூழலில் ,அக்னியில்
புடம்போட்ட ஆணிப்பொன்சொற்களால் கவிதைகளைப்
படைத்திருக்கும் கவிஞருக்குப் பாராட்டுக்கள்!
கவிதைகள் அனைத்தும் ஒருமுறை வாசித்தாலே
மனதிற்குள் புகுந்துஅப்படியே மனப்பாடமே செய்யவைத்து
விடுகின்றது!கவிதை களில் சிலயதார்த்தத்தைச் சொல்லுகின்றன.சில
தத்துவங்களை உதிர்க்கின்றன.சிலஅப்பட்டமாய் கவிஞர்
சொல்ல நினைத்தவற்றை அப்படியேசொல்லிவிடுகின்றன.
உதாரணத்திற்கு ஒன்று!(யதார்த்தம்)
காதல்
அடையில் இருக்கும்
முட்டை!
எப்போது வேண்டுமானாலும்
படாரென்று
ஓடு உடைந்து
வெளிவந்துவிடும்!"
கவிஞர் கரங்களில் நட்பு நாற்காலி போட்டு அமர்ந்து
கொள்கின்றது!தீடீரெனஅதற்கு கால் முளைக்கின்றது!ஏணியில் ஏறுகின்றது!இடையே சறுக்கிவிழவும் செய்கின்றது.அம்புக்குறியாய் மாறி அறிவிப்புப் பலகையில்போய்நட்பானதுஉட்கார்ந்து
கொள்கின்றது!அதேவேளையில் காதல்அடைகாக்கின்றது!ஆணிவேராய் ஆழப்பதிகின்றது!சிலநேரம் நங்கூரமிட்டகப்பலாய் நகர மறுக்கின்றது!பலநேரங்களில் வினாக்களைத் தொடுத்து .ஒருகணக்கு
வாத்தியாராய் உருமாறி காதைத் திருகவும் செய்கின்றது
காதல்!
நட்பு என்னும் நெட்டிழையும் காதல் என்னும் குறுக்கிழையும் கொண்டுகவினுற நெய்யப்பட்ட காஞ்சிப்பட்டு என்று
இந்நூலைக்கூறலாம்!நட்புக்கும்காதலுக்குமான வேறுபாட்டை பொன்.விக்ரம்
கவிநயத்துடன் கூறும்விதம்இதோ!
எப்போதாவது நிறையும்
எங்க ஊர்
கண்மாய்போல்
நட்பு!
எப்போதும் நிறைந்தே
கிடக்கும்
கடல் போல்
காதல்!
மனமார..
. இடைவெளி என்னும் பொன்.விக்ரம் அவர்களின் நூலை
இளையதலைமுறையினர் வாசித்துணரும் பொழுது உளவியல் புரிபடும்!உலகியலில் தெளிவு பிறக்கும்! நட்பு-காதல் என்ற இரு சக்கரங்களுடன்அன்பை
அச்சாணியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இத்தேரினை
இளைஞர்கள் சீராக வடம்பிடித்து இழுக்கும் வேளையில்
சமூக வாழ்வியல்திறம் செம்மைபெறும். மனிதமனம்
தடுமாற்றம் கொள்ளும்பொழுதில்,ஆற்றிலா?சேற்றிலா என்று கால் வைக்கத் திணறும்வேளையில் ,
இந்நூல்ஊன்றுகோலாய் உதவும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!இத்தகையநல்லதொரு படைப்பை நல்கிய பொன்விக்ரம்
அவர்களின் இலக்கியப்பயணம்அலைகடல்தாண்டி அகிலம்
முழுவதும் பரவ மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக