கவிஞர் இரா .இரவி !
தேர்தலுக்கு முன் தேனும் பாலும் ஓடும் என்றனர் !
தேர்தலுக்குப் பின் வென்றவர்கள் ஓடி விட்டனர் !
தொடர்வண்டி கட்டணத்தை பெருமளவில் உயர்த்தினர் !
சமையல் காற்றின் விலை மாதா மாதம் ஏற்ற உள்ளனர் !
பேராயக்கட்சி செய்திட்ட பெரும் தவறையே !
பாரதிய சனதாக் கட்சியினரும் செய்து வருகின்றனர் !
சுவிசு வங்கி கறுப்புப்பணம் மீட்ப்போம் என்றனர் !
சும்மா கண்துடைப்பு கடித நாடகம் நடத்துகின்றனர் !
மத்தியில் ஆட்சி மாறிய போதும் !
மக்களின் துன்பக்காட்சி மாற வில்லை !
ஏழை எளிய மக்களின் சிரமம் உணருங்கள் !
ஏழைகளின் வாழ்வில் விடியல் வேண்டும் !
பெட்ரோல் விலையை உடன் இறக்கிடுங்கள் நன்று !
பாதிப்பால் மக்களை உங்களை இறக்கிடுவார்கள் உணர்க !
கொடுத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள் !
கொடுமையிலிருந்து மக்களை மீட்டிடுங்கள் !
விலைவாசியை உடன் குறைத்திடுங்கள் !
வாய்ச்சொல் வீராப்பை நிறுத்திடுங்கள் !
காரணங்கள் புள்ளி விபரங்கள் தேவையில்லை !
கட்டாயம் விலைவாசியை குறைத்திடுங்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக