தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி !
.தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
வடமொழி எழுத்துக்கள் என்றும் வேண்டாம் !
வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு !
நடக்க முடியாதவருக்கு ஊன்றுகோல் தேவை !
ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று !
.தனித்தியங்கும் தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் !
தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து வேண்டாம் !
பொருளில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் !
ரோஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரோசா என்று எழுதிப் பழகுங்கள் !
இராஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் !
இராசா என்று எழுதிப் பழகுங்கள் !
ரமேஷ் என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் !
எழுத்துக்குப் பற்றாக்குறை தமிழில் இல்லை !
ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் !
இல்லாதவன்தான் பிட்சை எடுத்து வாழ்வான் !
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் !
வளமான எழுத்துக்களின் களஞ்சியம் தமிழ் !
வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் !
திட்டமிட்டு எழுத்துக் கலப்பை செய்கின்றனர் !
தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் !
அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ்மொழி !
அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக