பத்ம ஸ்ரீ ,முனைவர் ம .பொ.சிவஞானம் ! கவிஞர் இரா .இரவி !

பத்ம ஸ்ரீ ,முனைவர் ம .பொ.சிவஞானம் !  கவிஞர் இரா .இரவி !

26.6.1906 ---- 3.10.1995.

தமிழினத்தின் தன்னிகரில்லாத் தலைவர் ம. பொ.சி .!
தமிழருக்காகவே தன வாழ்வை  அர்பணித்தவர் ம. பொ.சி !

முகத்தை அலங்கரிக்கும் பெரிய மீசை !
அகத்தை அலங்கரிக்கும் அன்பின் ஓசை !

தாயின் தாலாட்டில் தமிழ்சை அறிந்தவர் !
திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் நேசித்தவர் ! 

அச்சு கோர்க்கும்  தொழிலாளியாக இருந்தவர் !
அரசியல் அறிஞராக வாழ்வில் உயர்ந்தவர் !

சிறையிலே  நூல்கள் படித்து தமிழ்ப் பற்றைப்  பெற்றவர் !
சிறைக்கு அஞ்சாமல் தமிழருக்காக  சிம்மக்குரல் தந்தவர் !

கப்பலோட்டிய தமிழர் வ .உ .சி. யின் சிலை திறக்க வைத்தவர் !
கர்ஜனைமிக்க வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு உரைத்தவர் !

தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் !
தன்னிகரில்லா முழக்கம் தந்து சென்னையைக் காத்தவர் !

தமிழ்நாடு என்று பெயர்   சூட்டிடக் காரணமானவர் !
தமிழ்  தமிழர் தமிழ்நாடுமுன்னேற்றத்திற்கு முழங்கியவர் !

சிலப்பதிகாரத்தின்  சிறப்புகளை எடுத்து இயம்பியவர் ! 
சிலம்புச் செல்வர் என்ற பட்டம் பெற்றவர்  !

புரட்சிக் கவிஞரின் பாராட்டிப் பெற்றவர் !
புகழுக்கு மயங்காத எளியவர் இனியவர் !

வள்ளலாரின் சமரசத்தை வாயாரப் புகழ்ந்தவர் !
வளமான தமிழகம் அமைந்திட உழைத்தவர் !

ஒழுக்கத்தின் வழி நின்று வள்ளுவம் காத்தவர் !
ஒழுக்க சீலர் என்ற நற்பெயர் பெற்றவர் !

மகாகவி பாரதியாரின் பாடல்களால் வீரம் பெற்றவர் !
மாண்புகளை பேச்சு எழுத்து இரண்டிலும்  பெற்றவர் !

தமிழர் உரிமைக்காக அஞ்சாமல் குரல் கொடுத்தவர் !
தமிழ் உணர்விற்காக ஓயாமல் ஓடி உழைத்தவர் !

மாநில  சுயாட்சிக்கு முதல் குரல் தந்தவர் !
மாநில செழுமைக்கு வழிகள் பல சொன்னவர் !

தமிழக எல்லைகள் காக்க தொல்லைகள் ஏற்றவர் !
தமிழக நலனுக்காக தன்னலம் மறந்தவர் !

அவர் இடத்தை ஈடு செய்ய ஒருவருமில்லை !
அவர் போல தமிழருக்கு உழைக்க யாருமில்லை !

உடலால் உலகை விட்டு மறைந்த போதும் !
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார் ம. பொ.சி .!


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்