மூன்றாம் பார்வை அறக்கட்டளை
நடத்திய
“ஹெலன் கெல்ல்ர்” அவர்களின் 135வது பிறந்த நாள் விழா
*****
மதுரை மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியின் சார்பில் ஹெலன் கெல்லர் அவர்களின் 135-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. விடுதி மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.
மதுரை 45-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. ஐ. அபுதாகீர் தலைமை வகித்தார். விடுதி நிறுவனர் “மனிதநேய மாமணி” எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் வரவேற்றார். கவிஞர் இரா. இரவி, யோகா ஆசிரியர் ஆர்.எம். சேது, திரு. எம். கோபி ஆகியோர் முன்னிலை உரையாற்றினார்கள்.
ஹெலன் கெல்லர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, விடுதி மாணவர் பார்வையற்ற திரு. ஆர். கார்த்திக் மிகச்சிறப்பாக எடுத்துக்கூறியதைப் பாராட்டி, அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு. சி. முத்துராஜா அவர்கள் திரு. ஆர். கார்த்திக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார். மேலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கடையில் வாங்கிய அரிய பேனாவை திரு. பழனியப்பன் அவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
விடுதி மாணவர் ஏ. முருகசாமி, பலகுரல் நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார், நடிகர்கள் வீராச்சாமி, ரகுவரன் , நடிகை காந்திமதி மற்றும் விமானம், புகைவண்டி, நாய், ஆடு, மாடு என பலகுரல்களில் பேசி அனைவரையும் கவர்ந்தார். விடுதி மேலாளர் என். ராஜா நன்றி கூறினார்.
--
கருத்துகள்
கருத்துரையிடுக