10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர் மாணவருக்கு பாராட்டு விழா !
10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர் மாணவருக்கு பாராட்டு விழா !
ஜே .சி .ஐ. மதுரை எக்செல் , நிலா சேவை மைய அறகட்டளை இணைந்து 10 ஆம் வகுப்பு ,12 ஆம்வகுப்பு அரசுத் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவியர் , மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது .
விழாவிற்கு புரட்சிக் கவிஞர் மன்றதின் தலைவர்
பி .வரதராசன் தலைமை வகித்தார் .முத்தமிழ் அறக்கட்டளை திருச்சி சந்தர் ,கவிஞர் இரா .இரவி ,.ஜே .சி .ஐ.ரித்தீஷ் . முன்னிலை வகித்தனர் .கவிக்குயில் இரா .கணேசன் வரவேற்று தொகுப்புரையாற்றினார்.தாய் தனிப் பயிற்சி நிலையத்தில் படித்து அதிகம் மதிப்பெண் பெற்றனர்.
காவல்துறை உதவி ஆணையர் முனைவர் கவிஞர்
ஆ .மணிவண்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டி சிறப்புரையாற்றினார். "ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் . 1/2 மதிப்பெண் குறைந்தால் கூட மருத்துவர் படிக்க இடம் கிடிக்காமல் வாழ்கையே மாறி விடும் .மிகவும் கவனமாகப் படியுங்கள்." என்று அறிவுரை கூறி பாராட்டினார் . பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பாராட்டப் பட்டனர் .
திரு ப . சின்ன முருகன் ,திரு ரெ.கார்த்திகேயன் , திருமதி அமுது ரசினி, திருமதி கவிக்குயில் இரா .கணேசன் ,திருமதி .மோகனக் கண்ணன் மற்றும் மாணவ மாணவியரின் பெற்றோர்களும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.தாய் தனிப் பயிற்சி நிலைய முதல்வர் திரு .மோகனக் கண்ணன் நன்றி கூறினார்
கருத்துகள்
கருத்துரையிடுக