திரு .மாடசாமி அவர்களுக்கு நன்றி .
மதுரை வடக்குமாசி வீதியில் கிருஷ்ணன் கோயில் உள்ளது .இங்கு தினமும் காலையில் ஒலிபெருக்கியில் சமஷ்கிருத சுலோகம் ஒலி பரப்பினார்கள் .தினமும் நடைப்பயணம் செல்லும்போது கேட்கும் யாருக்கும் இது என்னவென்றே புரிவது இல்லை .ஒரு சடங்கு போல இருந்தது .
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தமிழ்ப்பற்று மிகுதியாக உண்டு .
கோயில் நிர்வாகி திரு .மாடசாமி அவர்கள் உறவினர். நடைப்பயணம் செல்லும்போது அவரை சந்தித்தேன் .ஒரு வேண்டுகோள் வைத்தேன் .யாருக்கும் புரியாத சமஷ்கிருத சுலோகத்திற்குப் பதிலாக எல்லோருக்கும் புரியும் திருப்பாவை, திருவெம்பாவை , வைணவ தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்பலாமே என்று வேண்டுகோள் வைத்தேன் .அவர் மறுநாள் முதல் தமிழ்ப்பாடல் ஒலிக்க வைத்தார் .திரு .மாடசாமி அவர்களுக்கு நன்றி .
கருத்துகள்
கருத்துரையிடுக