மழை ! கவிஞர் இரா .இரவி !

மழை !   கவிஞர்  இரா .இரவி !

வானிலிருந்து  விழுந்தும் 
காயம் இல்லை 
மழை ! 
.
துயரம் தீர்ந்தது 
தூய்மைமிகு தூய 
மழை ! 

வெப்பமயமாதலை 
தடுத்து வென்றது 
மழை ! 

கொளுத்தும்  கோடையை
குளிராக்கி மகிழ்வித்தது  
மழை ! 

கடலிலும் பொழிந்தது 
மீன்களும் மகிழ்ந்தன 
மழை ! 

வாடிய பயிர்களின் 
வாட்டம் போக்கியது 
மழை ! 

உதிர்ந்த இலைகள் மீண்டும் 
துளிர்த்தன மரங்களில் 
மழை ! 

வராது வந்தது 
வரமாகப் பொழிந்தது 
மழை ! 

பூமி குளிர வானம் அனுப்பிய
ஜீவ அமிர்தம் 
மழை ! 

பஞ்சம் போக்க பசுமை செழிக்க 
வந்த சீதனம் 
மழை ! 

உலகப்போர் தவிர்க்க 
உலகத்திற்கு செய்த உதவி 
மழை ! 

கொடிய வெப்பத்தை 
தவிடு பொடியாக்கியது 
மழை ! 

விவசாயிகளின் வேதனை நீக்க 
வானம் வழங்கிய அன்பளிப்பு 
மழை !  

நிலத்தடி நீர் செழித்தது 
நீர் நிலைகள் நிறைந்தது 
மழை !

கல்நெஞ்ச கர்நாடகத்திடம் 
கேட்க   வேண்டாம் 
மழை ! 

இரக்கமற்றவர்களிடம் 
கெஞ்ச வேண்டாம் 
மழை ! 

விரிசல் கண்ட நிலங்கள் 
விவசாயம் கண்டன 
மழை ! 

மனிதர்கள் மட்டுமல்ல 
உயிரினங்களும் மகிழ்ந்தன 
மழை ! 

மண்ணோடு கலந்தது 
காதலர் போல 
மழை ! 

வறண்ட நிலங்கள் 
வளங்கள் அடைந்தன 
மழை ! 

அணைகளில் தேங்கி 
கவலை நீக்கியது 
மழை ! 

சேமித்தால் சிறப்பு 
வேண்டாம் வீணடிப்பு 
மழை ! 

கோடையில்  வந்த 
கொடை
மாமழை போற்றுவோம் !   


.

கருத்துகள்