கவனம் கொடூரன் ! கவிஞர் இரா .இரவி !
செருப்பாலடித்து விட்டு
கருப்பட்டி தந்தானாம்
மீனவர் விடுதலை !
லட்சகணக்கில் கொன்று விட்டு
சிறு எண்ணிக்கை விடுதலை
இலங்கை !
.
அப்பாவிகளை கைது செய்து
அரங்கேற்றினான்
விடுதலை நாடகம் !
அதையும் பாராட்டும்
அப்பாவி கூட்டம்
மீனவர் !
யோக்கியன் வருகிறான்
சொம்பை தூக்கி வை உள்ளே
அவன் வருகை !
மறக்க முடியாதவன்
மன்னிக்கக் கூடாதவன்
கொடூரன் !
இரக்கமற்ற அரக்கன்
இனம் அழித்த வேடன்
அவன் !
ஜாலியன் வாலபாக் மிஞ்சும்
கொடுரம் நிகழ்த்தியவன்
அவன் !
கொடுமையில்
கிட்லரை வென்றவன்
அவன் !
சுதந்திரம் கேட்டவர்களை
சுட்டு வீழ்த்தியவன்
அவன் !
விடுதலை கேட்டவர்களின்
வேரை அறுத்தவன்
அவன் !
ஜனநாயகத்தையும் மக்களையும்
குழி தோண்டி புதைத்தவன்
அவன் !
நெஞ்சம் பொறுக்கவில்லை
வஞ்சகனை நினைத்தால்
மோசக்காரன் !
வானூர்தி வழி குண்டுகள் வீசி
மக்கள் உயிரைப் பறித்தவன்
அவன் !
புலிகள் என்று சொல்லி
பூனைகளையும் கொன்றவன்
அவன் !
முப்படை தாக்குதல்
சொந்த மக்கள் மீதே நடத்தியவன்
அவன் !
சர்வாதிகாரத்தின் உச்சம்
தமிழனம் இல்லை மிச்சம்
முடித்தவன் அவன் !
ரோசம் மானம்
துளியும் இல்லாதவன்
அவன் !
நடிக்கிறான் நம்பாதீர்
நம்பிக்கை துரோகி
அவன் !
சிரித்தே கழுத்தறுக்கும்
நயவஞ்சகன்
அவன் !
கொலைகாரனுக்கு வரவேற்பு
கொள்கையாளருக்கு சிறை
மிக நன்று !
சிங்களன் உறவு
தமிழர் பகை
வாழ்க தேசியம் !
கருத்துகள்
கருத்துரையிடுக