கவிஞர் இரா .இரவிக்கு கலைமாமணி விக்ரமன் விருது !

கவிஞர் இரா .இரவிக்கு கலைமாமணி விக்ரமன் விருது !அன்பார்ந்த  நண்பர்களுக்கு வணக்கம் !

கவிதை உறவு 42 ஆம் ஆண்டு விழாவில் எனக்கு கலைமாமணி விக்ரமன் விருது அறிவித்து உள்ளார்கள்.

18.5.2014 மாலை 5.30 மணி .இடம் வாணிமகால் ,மகாசாமி அரங்கம் ,103.ஜி .என் .செட்டி சாலை .தியாகராயர் நகர் ,சென்னை .17.

 எஸ் .ஆர் .எம் .பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ விருது வழங்குகிறார்கள் .

சென்னை நண்பர்கள் விழாவிற்கு வருகை தர வேண்டுகிறேன் .
என்னைப்பற்றி !

தமிழ்நாடுஅரசு  சுற்றாலாத்துறையில் உதவு சுற்றுலாஅலுவலாராகப் பணி புரிந்துக் கொண்டே இலக்கியப்  பணியும் செய்து வருகிறேன் .

12 நூல்கள் எழுதி உள்ளேன் 13 வது நூல்" புத்தகம் போற்றுதும்"  அச்சில் உள்ளது .

தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வரும் எனக்கு வழங்க  உள்ள கலைமாமணி விக்ரமன் விருது இன்னும் ஊக்கம் தரும் .உங்கள் வாழ்த்துக்களுடன்இன்னும் துடிப்புடன் இயங்குவேன்.. விருது வழங்க உள்ள கவிதை உறவு மாத இதழ் ஆசிரியர் கலைமாமணி ஏர்வாடியார் அவர்களுக்கு  நன்றி . 

எனக்கு இலக்கிய குருவாக , வழிகாட்டியாக  உள்ள தமிழ்த் தேனீ முனைவர்  இரா .மோகன் அவர்களுக்கு  நன்றி . 

என்னை இயங்கிக் கொண்டே இருங்கள் என்ற ஒற்றைச் சொல்லால் இயக்கிக் கொண்டு இருக்கும் முதுமுனைவர் வெ.இறையன்பு 
இ .ஆ .ப . அவர்களுக்கும் நன்றி . 

என்ற இணையத்தில் 300 க்கும் மேற்பட்ட நூல்களுக்கு விரிவான விமர்சனம் எழுதி உள்ளேன் .  ,கவிதை ,கட்டுரை எழுதி வருகிறேன் .

என்ற இணையத்தில் எனது ஹைக்கூ கவிதைகள்  கவிதைகள் ,கவியரங்கக்  கவிதைகள் காணலாம் .

என்ற வலைப்பூவில் தினமும் எழுதி  வருகிறேன் .

என்ற இணையத்தில் எழுதி  வருகிறேன்.  

முக நூலில் எழுதி வருகிறேன்.


 போன்ற பிற இணையங்களிலும் எனது படைப்புகளை வாசிக்கலாம் .

.நண்பர்களான உங்கள் அன்போடும்  வாழ்த்துக்களோடும் என் இலக்கியப் பயணம் இன்னும் வேகமாகத் தொடரும் .நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்