மதியாதார் தலை வாசல் மிதிக்காதே ! கவிஞர் இரா .இரவி !
மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று !
மானமுள்ள மனிதருக்கு அவ்வை சொன்னது !
மானம் இல்லாதவனுக்கு அவ்வை வாக்கு !
முற்றிலும் புரியாது முட்டாளுக்கு வராதே !
உன் பெயர் மகிந்திர ராஜபட்சே அல்லது !
மானம் கெட்ட ராஜபட்சேவா வராதே !
அழைத்தது தவறு என்கிறது தமிழர் கூட்டம் !
அறிந்தும் வருவது மானம் கெட்ட செயல் வராதே ! !
வராதே ! வராதே ! இந்தியாவிற்கு வராதே !
வராதே ! ரோசம் மானம் என்பது இருந்தால் வராதே !
தமிழ் இனத்தைக் கொன்று குவித்த கொடூரனே !
தமிழக வரிப்பணத்தில் நடக்கும் விழாவிற்கு வராதே!
இரக்கமற்ற மிருகமே உனக்கு தகுதி இல்லை !
இந்திய மண்ணை மிதிக்காதே ஒற்றுமை சிதைக்காதே !
குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்று பாராமல் !
கொன்று குவித்த கொடிய வஞ்சகன் வராதே !
.
போரில்லாப் பகுதி என்று அறிவித்து வரவழைத்து
போரிட்டுக் கொன்ற நயவஞ்சகனே வராதே !
வெள்ளைக் கொடி ஏந்தி வந்தவர்களையும் !
வெண்புறாவைப் போல சுட்டவனே வராதே !
மனிதாபிமானமற்ற மனித விலங்கே !
மனசாட்சியற்ற காட்டுமிராண்டியே வராதே !
மறக்க முடியாத மன்னிக்க முடியாத !
மாபெரும் குற்றங்கள் புரிந்தவனே வராதே !
ஐ .நா .மன்றத்தால் தண்டிக்கப்பட்டு !
தண்டனை பெறும் காலம் தூரத்தில் இல்லை !
கருத்துகள்
கருத்துரையிடுக