பேராயக்கட்சியின் படுதோல்வி ! கவிஞர் இரா .இரவி !

பேராயக்கட்சியின் படுதோல்வி ! கவிஞர் இரா .இரவி !

ஈழக்கொடுமைக்கு துணை நின்றவர்கள் !
ஏளனப்பட்டு  படுதோல்வி அடைந்தனர் !

தமிழினத்தைக் கொன்று குவிக்க அவர்கள் !
தாராளமாக ஆயுதங்கள் வழங்கியவர்கள் !

ஆயுதத்திலும் ஊழல் பல புரிந்தவர்கள் !
அரசியல் அனாதைஆகி விட்டனர் !  

குடும்ப அரசியல் கோட்டம் அடங்கியது !
கூட்டுக் கொள்ளை  முடிவுக்கு வந்தது !

மன்னர் ஆட்சிப்  போல ஆண்டவர்களின் 
மண்டையில் கொட்டிய நல் முடிவு  !

மக்களின் அடிப்படைத் தேவைகளின் விலைகள் !
மலை போல  உயர்ந்திடக் காரணமானவர்கள் !

எரிபொருள் விலையை தினமும் ஏற்றியவர்கள் !
எறியப்பட்டனர் தூக்கி எறியப்பட்டனர் !
சமையல்  காற்றின் விலையை ஏற்றியவர்கள்
சமையல் கட்டிற்கு அனுப்பப்பட்டனர் !

பாராளுமன்றத் தேர்தலில் பேராயக்கட்சிக்கு!
படுதோல்வி தந்திட்ட மக்களுக்கு நன்றி !

தமிழ்நாட்டில் ஒன்றில்  கூட   வெல்லவில்லை !
தமிழரின் தீர்ப்பு பாடம் அவர்களுக்கு !

பொம்மை பிரதமர் வீட்டுக்குப் போனார்  !
போலி அரசியல் முகத்திரை கிழிந்தது !

அந்நியநாட்டில் முதலீடான பணம் வரட்டும் 
அகில இந்தியாவும் வளம் பெறட்டும் !

கருத்துகள்