ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு )           கவிஞர் இரா .இரவி !

யாரும் உடைக்காமலே 
உடைந்தது 
வானவில் !

நேரம் இருப்பதில்லை 
வஞ்சகம் நினைக்க 
உழைப்பாளிக்கு !

குடிப்பவனின் 
உயிர் குடித்தது 
மது !

புகைபிடித்தல் 
உயிர்க்கு 
பகைபிடித்தல் !

துன்பமில்லை
சொல்ல முடிந்ததை மட்டுமே   
நினைத்தால் !  

கவனம் 
சிறிய கல் 
பெரிய விபத்து !

எல்லோரும் 
இந்நாட்டு மன்னர்கள் சரி 
குடிமக்கள் ?

இசையால் 
பயிர் வளர்கிறது 
மனிதன் ?

இருப்பதில்லை
காகத்தின் ஒற்றுமை 
மனிதர்களுக்கு ?

கவனிக்கின்றன குழந்தைகள் 
தாய்மொழி 
கருவிலேயே !

வருந்தவில்லை காகம் 
பொரிந்தது 
குயிலின் குஞ்சு !

உணர்க 
நம் கையில் 
நம் உடல் நலம் !

எதிர்மறை சிந்தனைகளின் 
அட்சயப்பாத்திரம் 
தொலைக்காட்சி ! 

கருத்துகள்