மனிதநேயம் மிக்கவர்கள்
மனித உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !
நோயாளியின் நோய்
நீக்கும் நேயர்கள்
செவிலியர்கள் !
தன்னைத் தேய்த்து
வாசம் தரும் சந்தனங்கள்
செவிலியர்கள் !
தன்னை உருக்கி
ஒளி தரும் மெழுகுகள்
செவிலியர்கள் !
சாதனையாளர்கள்
செவிலியர்கள் !
நொந்து கொள்ளாத
நல்ல உள்ளங்கள்
செவிலியர்கள் !
தூக்கம் தவிர்த்து
காத்து நிற்பவர்கள்
செவிலியர்கள் !
உடல் நலம் பெற
ஓய்வின்றி உழைப்பவர்கள்
செவிலியர்கள் !
தன் உயிர் உருக்கி
பிறர் உயிர் காப்பவர்கள்
செவிலியர்கள் !
இனிய சொல் சொல்பவர்கள்
வன்சொல் சொல்லாதவர்கள்
செவிலியர்கள் !
ஆறுதல் சொல்லி
தேறுதல் தருபவர்கள்
செவிலியர்கள் !
உடல்காயம் மட்டுமல்ல
மனக்காயமும் ஆற்றுபவர்கள்
செவிலியர்கள் !
மருத்துவர்கள் எள் என்றால்
எண்ணையாய் நிற்பவர்கள்
செவிலியர்கள் !
பொறுமையின் சின்னங்கள்
அன்பின் அடையாளங்கள்
செவிலியர்கள் !
ஆண் பெண் இரு பாலிலும்
உள்ள சொக்கத் தங்கங்கள்
செவிலியர்கள் !
கருத்துகள்
கருத்துரையிடுக