மா .பேபி சரோஜா சதாபிசேகம் திருமண விழாதிருமண விழா 8.5.2014 அன்று சேலத்தில் சாரதா கல்லூரி சாலையில் உள்ள தெய்வீகம் திருமண மன்றத்தில் நடைபெற்றது .
கலைமாமணி பேராசிரியர் முனைவர் கு .ஞானசம்பந்தன்
எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் ,கோடை பன்பலை பொறுப்பாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன் ,தி இந்து மண்டல மேலாளர் முரளிதரன் ,உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் ,பேராசிரியர்கள் பெர்னாட்ஷா ,திரு& திருமதி நம் சீனிவாசன் ,, தணிக்கையாளர்கள் சண்முக சுந்தரம் ,சஞ்சீவி ராஜன் B.S.N.L. முனைவர் நேரு , N.C.B.H.மண்டல மேலாளர் கிருஷ்ணா முர்த்தி, தாசில்தார் ( ஒய்வு ) அழகர்சாமி ,உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி அனைவரும்மதுரையில் இருந்து சேலம் சென்று விழாவில் கலந்து வந்தோம் .
.தி இந்து திரு அண்ணாமலை ,நடிகர் வடிவுக்கரசி ,திருமதி தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பல் முக்கிய பிரமுகர்கள் சென்னையில் இருந்து சேலம் வந்து சிறப்பித்தனர் .
விழா மிக எளிமையாகவும் இனிமையாகவும் சிறப்பாகவும் நடந்தது .
முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் வருகை தந்த அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று உணவு சாப்பிட வைத்து உபசரித்து வழியனுப்பி வைத்தார்கள் .
முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் பங்குபெற்று சிறப்பித்தனர் .விழா அழைப்பிதழிலும் ,தாம்புல பையிலும் யாருடைய படிப்பும் அச்சிடவில்லை . அரிய பட்டமான இ .ஆ .ப . கூட அச்சிடவில்லை . சிலர் சாதாரண பட்டம் பெற்று பெரிய எழுத்தில் போடுவதும் ,பட்டம் போட விடுபட்டால் சண்டை போடுவதும் என் நினைவிற்கு வந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக