சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சங்கப் புலவர் சபை சார்பில் முனைவர் இரா .செல்வக்கணபதி அவர்களுக்கு பாராட்டு விழா !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சங்கப் புலவர் சபை சார்பில் முனைவர் இரா .செல்வக்கணபதி அவர்களுக்கு  பாராட்டு விழா !

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தந்த செந்தமிழ் வாரிதி ,
கலைமாமணி முனைவர் இரா .செல்வக்கணபதி அவர்களுக்கு பாராட்டு விழா மதுரையில் பார்சூன் பாண்டியன் விடுதியில் நடைபெற்றது .

மீனாட்சி சுந்தரேசுவரர்  திருக்கோவில் தக்கார் திரு.கருமுத்து
 தி .கண்ணன் தலைமை வகித்தார்கள் .மீனாட்சி சுந்தரேசுவரர்  திருக்கோவில் இணை  ஆணையர் திரு. பொ. ஜெயராமன் முன்னிலை வகித்தார் .முனைவர் அம்பை லோ .மணிவண்ணன் வரவேற்றார் .  

.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் 
ம .திருமலை பாராட்டுரை வழங்கினார் .மதுரை  கம்பன் கழக நிறுவனர்  சங்கர சீதாராமன் வாழ்த்துரை வழங்கினார் .பன்னிரு திருமுறை புலவர் சுந்தர்ராமன் வாழ்த்துரை வழங்கினார் .செந்தமிழ் வாரிதி ,கலை மாமணி முனைவர் இரா .செல்வக்கணபதி
ஏற்புரையாற்றினார் .

 திருமதி செல்வக்கணபதி அவர்களும் மேடையில் அமர்ந்து இருந்தார்கள் .அவர்களையும் பாராட்டினார்கள் .
புலவர் சங்கரலிங்கம் தொகுப்புரையாற்றினார் .தமிழாசிரியர் லீலா நன்றி கூறினார் . 

சைவ சமயக் கலைக் களஞ்சியம்  நூல்களை மிகச் சிறப்பாகத் தொகுத்த உழைத்த செந்தமிழ் வாரிதி ,கலை மாமணி முனைவர் இரா .செல்வக்கணபதி அவர்களை அனைவரும் பாராட்டினார்கள் .

விழாவில் கவிமாமணி   சி .விரபாண்டியத் தென்னவன் ,கவிஞர் இரா .இரவி  , புலவர் வேலாயுதம் , உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் பசும்பொன் , பேராசிரியர் முனைவர்  ரேணுகா பசும்பொன்,  கடம்பவனம்  திருமதி சித்ரா கணபதி,,பட்டிமன்ற நடுவர் பொன் சந்திரசேகரன் பட்டிமன்றப் பேச்சாளர்கள் முத்து இளகோவன், திருநாவுக்கரசு ,கவிஞர்கள் வாரியார்தாசன் ,முருகேசன்  , எ .ஜி .எஸ் . இராம்பாபு , ஜான் மோசஸ் , பாரதி யுவகேந்திரா   நெல்லை பாலு  உள்ளிட்ட  மதுரையில் உள்ள கவிஞர்கள் ,பேராசிரியர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டினர் .

விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நட்சத்திர விடுதியான பார்சூன் பாண்டியன் விடுதியில் இரவு விருந்து வழங்கப்பட்டது .

பல ஆயிரங்கள் செலவு செய்து பாராட்டு விழா நடத்திய சங்கப் புலவர் சபை நிறுவனர்  பொற்றாமரை கொண்டான் மருத்துவர்  சீனிவாசன் அவர்கள் தன் பெயரை அழைப்பிதழில் அச்சிடாமல் மேடையில் அமராமலும்  புரவலராக இருந்து தமிழ்ப்பணி செய்துள்ளார் .திருமதி . சீனிவாசன் அவர்களும் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்து விழாவை சிறப்பாக நடத்திட  ஒத்துழைப்பு வழங்கினார்கள் .

கருத்துகள்