ஹைக்கூ ! ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !   ( சென்றியு )   கவிஞர் இரா .இரவி !

எடுத்து ஊதும்  வரை 
அமைதி காத்தது
புல்லாங்குழல் ! 

வளர்கின்றன 
கண்ணுக்குத் தெரியாமலே 
வேர்கள் !

வேர் குடித்தது நீர் 
பூத்தது பூ 
மரத்தில் !

உணர்த்தியது 
ஓவியன் ஆற்றல் 
ஓவியம் !

பேசுகின்றனர் 
கிண்டல் கேலி 
நேர்மையாளனை!

உழவனை மட்டுமல்ல 
குயவனையும் வாட்டியது 
உலகமயம் !

ஏற்றுமதி சுருங்கி 
இறக்குமதி பெருகியது 
தாராளமயம் !

எங்கும் எதிலும் 
நிறைந்து உள்ளன 
ஊழல் !

உடல் இங்கு 
உள்ளம் அங்கு 
வகுப்பறையில் மாணவன் ! 


கருத்துகள்