தேர்தல் ! கவிஞர் இரா .இரவி !

தேர்தல் !   கவிஞர் இரா .இரவி !

குடிமகன் கடமை வாக்களிப்பு சரி 
வென்றவர் கடமை ஏமாற்றுவதா ?
தேர்தல் !

நம்பிக்கையோடு வாக்களிப்பு 
நம்பிக்கை மோசமே பரிசளிப்பு 
தேர்தல் !

யாரை நம்பினாலும் 
மோசம் போகிறோம் 
தேர்தல் !  

எல்லாருமே திருடர்கள்தான் 
இளையராஜா பாடல் நினைவிற்கு 
தேர்தல் !  

சுரண்டும் கோடிகள் 
சுவிஸ் வங்கியில் முதலீடு  
தேர்தல் !

சரியான ஆளை சுட்டாததால் 
ஆள் காட்டி விரலில் கருமை 
தேர்தல் !  

வழங்குவதில்லை வாய்ப்பு 
கட்சிகள் நல்லவர்களுக்கு 
தேர்தல் !  

நல்லவர்களுக்குப் பஞ்சம் 
குறைந்தபட்சக் கெட்டவர் தேர்வு 
தேர்தல் !  

மாற்றம் மாற்றம் என்பார்கள் 
வென்றதும் மாற்றம் பெறுவார்கள் 
தேர்தல் !

ஏற்றம் ஏற்றம் என்பார்கள் 
வென்றதும் ஏற்றம் பெறுவார்கள் 
தேர்தல் !

குடும்பமே இல்லை என்பார்கள் 
குடும்பம் உண்டு என்பார்கள் 
தேர்தல் !

மக்களுக்காக உழைப்பேன் ஆம் 
என் மக்களுக்காக உழைப்பேன்
தேர்தல் !

வானத்தை வில்லாய் வளைப்போம் 
வானில் விமானத்தில் பறப்பார்கள் 
தேர்தல் !

கெஞ்சிக்கேட்பார்கள் வாக்கு 
வென்றதும் மறப்பர் சொன்ன வாக்கு 
தேர்தல் !

வீடு தேடி வருவார்கள் 
வென்றதும் நாம் தேட வேண்டும் 
தேர்தல் !

எல்லா சலுகைகளும் வென்றவருக்கு 
எல்லா ஏமாற்றம் வாக்களித்தவர்களுக்கு 
தேர்தல் !

ஊழலை ஒழிப்போம் என்று வந்து 
ஊழல் மன்னாராவர்கள் 
தேர்தல் !

வாக்களிக்க நவீன இயந்திரம் சரி 
வாக்களித்த ஏழைகள் வாழ்க்கை ?
தேர்தல் !

ஜனநாயகம் பெருமைஅன்று 
பண நாயகம் சிறுமை இன்று 
தேர்தல் !

சின்ன மீன்கள் போட்டு 
சுறா  மீன்கள்  பிடிப்பு 
தேர்தல் !

மணலைக்  கயிறாகத் திரிப்போம் 
மணல் கொள்ளை அடிப்போம் 
தேர்தல் !

சாதியை ஒழிப்பது கொள்கை  
அதிகபட்ச சாதிக்காரரே வேட்பாளர் 
தேர்தல் !

பேசியே குழப்புவதால் 
குழப்பத்திலேயே வாக்களிப்பு 
தேர்தல் !

நான் தனி ஆள் என்பார்கள் 
தோப்பாகி விடுவார்கள் 
தேர்தல் !

பெயரோ பெரிது  மக்களாட்சி 
நடப்பதோ அரசியல்வாதி  ஆட்சி 
தேர்தல் !

ஐந்து  வருடங்கள் சுரண்டிட 
அளித்திடும் அங்கீகாரம் 
தேர்தல் !

எத்தனை முறை வந்தாலும் 
ஏழைகளுக்கு விடியவேயில்லை 
தேர்தல் !

செலவோ பல  கோடிகள் 
மக்களுக்கு பலனோ  பூச்சியம் 
தேர்தல் !

விலைவாசியை இறக்குவோம் என்று 
வந்ததும் ஏற்றுவார்கள் 
தேர்தல் !

குதிரைக் கொம்பாகும்
இளைஞர்கள் வேலைவாப்ப்பு 
தேர்தல் !

அன்று உத்தமர் என்பர் 
இன்று திருடுடர் என்பர் 
தேர்தல் !

ஒழியவில்லை மன்னராட்சி 
தொடரும் வாரிசு வேட்பாளர் 
தேர்தல் !

தெரிந்தே ஏமாறும் 
ஏமாற்றுத் திருவிழா 
தேர்தல் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்