ஹைக்கூ ஆற்றுப்படை ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் ! கவிஞர் புதுயுகன் ! லண்டன் !

ஹைக்கூ  ஆற்றுப்படை !

 நூல் ஆசிரியர் கவிஞர் இரா. இரவி !

 நூல் விமர்சனம்  !  கவிஞர் புதுயுகன் !  லண்டன் ! 
 pudhuyugan@yahoo.com

-

ஜெயசித்ரா வெளியீடு, ; நூல் கிடைக்குமிடம் மின்னல் கலைக்கூடம் ,117.எல்டாம்ஸ் சாலை ,சென்னை .600018. வசீகரன் அலைபேசி 9841436213.விலை: ரூ 50 


பல ஹைக்கூ கவிதை நூல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் மீது தனது விமர்சன ஒளி வீசிக் காட்டி இருக்கிறார், இலக்கிய விமர்சகராகவும் பரிணாம வளர்ச்சி எய்தியிருக்கும் கவிஞர் இரா இரவி. அதுதான் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ஹைக்கூ ஆற்றுப்படை’ என்ற வெற்றிகரமான நூல். 

இலக்கிய விமர்சனத்திற்கு ‘இலக்கு’ மற்றும் ‘முறைமை’ என்ற இரண்டு கூறுகள் அத்தியாவசியம் என்று சொல்லலாம். 

இந்த விமர்சன நூலின் இலக்கு, 26 ஹைக்கூ கவிதை நூல்களை ஒரே விமர்சன களத்தில் எடுத்து வைத்து தற்கால ஹைக்கூ கவிநலத்தை ஆய்தல். மற்ற இலக்குகள் கவிதையின் வாசகர்கள், பிற கவிஞர்கள். 
இதன் முறைமை [Methodology], ‘நூல் மற்றும் நூலாசிரியர் பற்றிய அறிமுகம், கவி நயங்களை, உத்திகளை உதாரண வரிகளோடு அணுகுதல், நூலின் நல்லவை, அல்லவை இவற்றை முத்தாய்ப்பு வரிகளோடு கூறி முடித்தல்’ என்ற இந்தக் கட்டமைப்பு. 

தனது முதல் விமர்சன நூலிலேயே, இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தி செய்து 
பயன்தரும் விதமாக படைத்திருக்கிறார். 'ஹைக்கூவை நோக்கி வாசகர்களை ஆற்றுப்படுத்தும் முயற்சி' என்று 'ஹைக்கூ ஆற்றுப்படை' என்ற நூலின் தலைப்பிற்கு பெயர்க் காரணமும் கூறுகிறார் நூலாசிரியர், அவரது முன்னுரையில் . 

சாணிலும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட 
கோணிலும் உளன்.... (கம்பன், கம்பராமாயணம், 124) 

என்று பிரகாலாதன் இறைவனின் இருப்பை இரணியனிடம் சொல்வதாக எழிலுற காட்டுவான் கம்பன். அதைப் போல நுணுக்கத்தின் நுணுக்கமாக, சுருக்கத்தின் விரிவாக, அணுவின் சத கூறினை பிளந்தாலும் கிடைக்கிற சக்தியாக விளங்க வேண்டும் ஹைக்கூ! 

ஹைக்கூவைப் பற்றியே ஒரு ஹைக்கூ இங்கே தருகிறேன்: 

மூன்றே துளிகளில் 
ஒரு கடல் 
ஹைக்கூ! 

இந்தச் சிந்தனையை, சீர்மையை இந்த விமர்சன நூல் எங்கும் பார்க்கலாம். 

முதல் விமர்சனமே ‘இதுவே தமிழில் முன்னோடி ஹைக்கூ கவிதை நூல், தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்’ என்று இனிய அறிமுகத்தோடு தொடங்குகிறது. 1998ஆம் ஆண்டில் ‘ஐக்கூ அருவிகள்’ என்ற தலைப்பில் வெளியான கவிஞர் அமுதபாரதி அவர்களின் கவிதை நூலின் விமர்சனம் தான் அது. 

கூறியது கூறல் 
குற்றமல்ல 
கூவுக குயிலே! 

[கவிஞர் அமுதபாரதி, ‘ஐக்கூ அருவிகள்’] 

குயில் கூவலின் இனிமையைச் சொல்லும் வரிகள். இதற்கு விமர்சகரின் விமர்சனம் 'குயிலுக்குக் கவிஞர் சொன்னதை பேச்சாளர் தமக்குச் சொன்னதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதே மிகவும் முக்கியம்’. 

தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் 'இரவி ஒரு பகுத்தறிவுச் சிந்தனையாளர், பெரியாரியப் பற்றாளர், ஈழத்தமிழர்பால் இமாலய ஈடுபாடு கொண்டவர்' என்று படம் போல தனது முன்னுரையில் இவரை நமக்குக் காட்சிப்படுத்தி விடுகிறார். 
இதற்கு ஆதாரம் நூலிலேயே இருக்கிறது. 

தூண்டிலில் சிக்கும் 
மீனுக்குத் தெரியுமா? 
புழுவின் வலி 
[கவிஞர் அமுதபாரதி, ‘ஐக்கூ அருவிகள்’] 

ஆழமான இந்த வரிகளுக்கு கவிஞர் இரா. இரவியின் விமர்சனப் போர்வை : 'மீன்கள் மட்டுமல்ல பல மனிதர்களும், சக மனிதர்களின் வலியை உணருவதில்லை. ஈழத்தமிழர் வலியை நாம் உணரவில்லை'. 

கவிஞர் மு. முருகேஷின் 'நிலா முத்தம்', கவிஞர் சிபியின் ‘மகரந்த ரகசியங்கள்’ போன்ற முக்கிய நூல்களை விமர்சிக்கும் போது வியப்பை பதிவு செய்திருக்கிறார். அதுபோல ‘ஹைக்கூவின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல்' என்று கவிஞர் பரிமளம் சுந்தரின் 'ஜப்பானிய - தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு' நூலுக்கு நல்முத்திரை பதித்திருக்கிறார். 

தென்றலே பார்த்துப் போ 
தெரு முனையில் 
அரசியல் கூட்டம் 
[சு. முத்து] 
என்ற கவிதை அந்த முத்திரைக்கே உயிர் கொடுக்கிறது. 

கவிஞர் நாணற்காடனின் நூலில் கடைசிப் பக்கத்தில் பிரசுரம் செய்த இதழ்களை பட்டியலிட்டு நன்றி கூறியிருப்பதை குறிப்பிட்டு 'நன்றி மறப்பது நன்றன்று' என்பதற்கு இலக்கணம் என்கிறார். 
அறிவுச் சொத்து, உரிமை இவை பிற சொத்துக்களை விடவும் மதிப்பு மிகுந்தவை. எனவே இது பாராட்டத்தகுந்தது என்பதையும் தாண்டி, ‘படைப்புக் கடமை’ என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. இந்தியப் படைப்புலகம் இந்த விஷயத்தில் வரும் நாட்களில் முழுகவனம் செலுத்துவது நலம். படைப்புகளை பிரசுரித்தவர்கள், மேற்கோள்கள், பிறரின் சிந்தனைகள் இவற்றை முறையாக அங்கீகரிக்க வேண்டியது அவசியம். அது உலகத் தரத்திற்கான ஒரு கூறு. 

கவிஞர் ம. ஞானசேகரன் லிமரைக்கூவை தனி நூலாக [ஆதிக்குடி] கொண்டு வந்திருப்பதைப் பாராட்டுவது சிறப்பு. ஹைக்கூ, சென்ரியு போன்ற வடிவங்களை பெயர் மாற்றிக் கொடுத்தோ, ஒரே நூலில் கொடுத்தோ அல்லது பிழையாக அழைத்தோ கவிதை நூல்கள் வருவதைப் பார்க்கிறோம். இதைப் போன்ற வடிவங்கள் உள்ளபடியே இன்றைய புதுக்கவிதைக்கு தேவையில்லை. ஆனால் தேவை என்று முடிவு செய்து கவிதை / நூல் எழுதத் துவங்கி விட்டால் பிழை இல்லாமல் அதை அமைத்தால் தான் வருங்கால கவிதைக்கல்வி, ஆராய்ச்சி, வாசித்தல் இவற்றிற்கு உதவ முடியும். மேற்சொன்ன பாராட்டின் மூலம் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுகிறார் ஆசிரியர். 

இந்த நூலின் மற்றொரு முக்கிய அம்சமாக, தனித்தன்மையாக நான் கருதுவது முற்போக்குச் சிந்தனைகளுக்கு இவர் கொடுக்கும் முக்கியத்துவம். இது நூல் முழுக்க வருகிறது. இது இன்றைய சமூகத்தேவையும் கூட. 
'புன்னகை மின்னல்' என்ற நூலுக்கான விமர்சனத்திலும் இந்தத் தேவை பூர்த்தி செய்யப் படுகிறது. காக்கியும் காவியும் செய்யும் திருவிளையாடல்களைச் சுட்டிக் குட்டி இருக்கிறார் விமர்சனத்தில். கவிதை இதோ; 

காக்கியும் காவியும் 
சாதி பேதம் பார்ப்பதில்லை 
பாலியல் பலாத்காரத்தில் 

[கவிஞர் சி. விநாயகமூர்த்தி, 'புன்னகை மின்னல்'] 


ஜப்பானிய கவிஞர்களின் ஹைக்கூக்களை மொழிபெயர்த்திருக்கும் 'ஜப்பானிய ஹைக்கூ 400 நால்வர் நானூறு’ என்ற கவிஞர் அமரனின் நூலைப் பற்றிச் சொல்லி விமர்சித்திருப்பது நன்று. 

கவிஞர் வாலிதாசனின் 'கைக்குட்டைக் காகிதங்கள்' நூலை நல்லபடியாக விமர்சித்து கடைசியில் எழுதியவை அனைத்தையும் வெளியிடாமல் தேர்வு செய்து வெளியிடுங்கள் என வேண்டுகோள் வைப்பது நல்ல விமர்சனத்திற்கு அழகு. 

இப்படி ஒரே நூலில் பல ஹைக்கூ கவிஞர்களை கொண்டு வந்து நிறுத்துகிறார்; நிறைவாக பாராட்டுகிறார்;இதமாக விமர்சிக்கிறார். 
விசாலம் விடுத்த கட்டுப்பாடோடு, கட்டமைப்போடு விளங்குகிறது இவரது விமர்சனம் [compact critique]. 

அதேசமயம் தனித்தனி விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்த நூலை பார்க்க வேண்டி இருக்கிறது. அந்தப் பணியை திறம்பட செய்திருக்கிறது இந்த நூல். ஆனால் அதையும் தாண்டி ஒரு பரந்த பறவைக்கோண பார்வையில் தமிழ் ஹைக்கூ தளத்தில் இந்த நூல்கள் எங்கே அமரவைக்கப் பட்டிருக்கின்றன என்ற விமர்சகரின் மதிப்பீடுகளை, புள்ளிகளை [Ratings] பதிவு செய்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. காரணம் ஆசிரியர் கவிஞர் இரா இரவிக்கு அந்தத் தகுதி உண்டு. 

மொத்தத்தில் ‘ஹைக்கூ ஆற்றுப்படை’, ‘உள்ளங்கைக்குள்



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்