அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி
எம் .பழனியப்பன் !
மனித நேய மாமணி எம் .பழனியப்பன் .இவருக்கு சிறு வயதில் பார்வை இருந்தது .காயச்சல் வந்து பார்வை பறி போனது. பார்வையின் பலனும் ,பார்வையற்றதால் உள்ள துன்பம் அறிந்த காரணத்தால் .பார்வையற்றவர்களின் துன்பம் போக்க மூன்றாம் பார்வை அறக்கட்டளை மூலம் அகவிழி பார்வையற்றோர் விடுதி மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார் . 8 ஆண்டுகள் கடந்து 9 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் .வருடாவருடம் இரத்தம் வழங்கி இரத்ததான முகாம் ,விழி தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .இங்கு பார்வையற்ற மாணவ மாணவியருக்கு இலவச உணவு உடை தங்கும்வசதி அளித்து வருகிறார் .தனக்கு பார்வை பறி போகி விட்டதே என்று சோகத்தில் நான்கு சுவருக்குள் சோர்ந்து விடாமல் பார்வையற்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு பல போராட்டங்களுக்கு நடுவே அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .விடுதியில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயற்சி அளிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார் .
எம் .பழனியப்பன் அவர்களுக்கு மனிதநேய மாமணி விருதை துணை வேந்தர் மருதமுத்து அவர்கள் வழங்கினார்க ள் .அன்று முதல் பழனியப்பன் மீது அன்பு பிறந்தது திரு .சங்கர சீதாராமன் அவர்களுக்கு.இலக்கிய ஆர்வலர் .கம்ப இராமாயண ஈடுபாடு மட்டுமன்றி எனது ஹைக்கூ கவிதையும் ரசிப்பார் .மனம் திறந்து பாராட்டுவார் .பெரிய இலக்கிய விழாக்களில் எனது ஹைக்கூ கவிதையை மேற்கோள் காட்டி பெருமை சேர்ப்பார்கள்.நல்ல மனிதர். அன்பானாவர் . .
மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள விஷ்வாஷ் கலையரங்கில் அவர்கள் நடத்தும் கம்பன் கழக விழாக்கள் மட்டும் நடக்கும் .வேறு வெளி விழாக்கள் நடத்த அனுமதிப்பது இல்லை .அங்கு இசை நிகழ்ச்சி நடத்த திரு .எம் .பழனியப்பன் அனுமதி கேட்டபோது என் மீது உள்ள அன்பாலும் திரு .எம் .பழனியப்பன் மீது உள்ள அன்பாலும்
இலவச அனுமதி வழங்கியதோடு .இசை நிகழ்ச்சிக்கான நன்கொடை சீட்டுகள் வீடுகளில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கினார்கள் .
பணம் இருப்பவர்களுக்கு மனம் இருக்காது என்பார்கள் .ஆனால்
பணம் இருப்பவர்களுக்கு மனம் இருக்காது என்பார்கள் .ஆனால்
திரு .சங்கர சீதாராமன் அவர்களுக்கு பணமும் நல்ல மனமும் உண்டு அவர் பணக்காரர் மட்டுமல்ல நல்ல மனக்காரர் .அவரை அலைபேசியில் அழைத்து நன்றி கூறினேன் .
இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது .விழாவிற்கு என்னை தலைமை வகிக்க வைத்தார் இனிய நண்பர் பழனியப்பன். சூரியன் பன்பலை அறிவிப்பாளர் இனிய நண்பர் ஷ்டீபன் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக பன்பலை நிகழ்ச்சி போலவே தொகுத்து வழங்கினார்.
நன்கொடைச் சீட்டு விற்க உதவிய யாழினி ,பாப்பாக்கனி , அஞ்சலை, இராஜா ,சேக், ஜெயகுமார் ,முத்துக் குமார் ,அம்சத்கான், பெருமாள் பாண்டி, முருகபாரதி , விடுதி மேலாளர் இராமநாதன், அகவிழி விடுதி கணினி இயக்குனர் வரை அனைவருக்கும் விழா மேடையில் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டச் சொன்னார் பழனியப்பன்.
பார்வையற்ற பாடகர்கள் குருநாதன் ,காசி நாதன் இருவரும் மிகச் சிறப்பாக பாடினார்கள் .பாடகர் குருநாதன் டி .எம் .சௌந்தரராஜன், நாகூர் அனிபா உள்ளிட்ட பலரின் குரலில் அற்புதமாகப் பாடினார். திரு .காசி நாதன் அவர்கள் காதல் ஓவியம் திரைப்படத்தில் வரும் சங்கீத சாதி முல்லை பாடலை மிகச் சிறப்பாகப் பாடி எல்லோரையும் எழுந்து நின்று கை தட்ட வைத்தார் .மெய்சிலிர்த்துப் போனேன். அவருடைய திறமை கண்டு வியந்தது அவை . கண்ணை முடிக் கொண்டு பாடலைக் கேட்டால் எஸ் .பி .பாலசுப்ர மணியன் பாடுவது போலவே இருந்தது . பாடலோடு ஒன்றி மிகவும் ரசித்துப் பாடினார்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக குக்கூ பட நாயகி போன்ற பார்வையற்ற ஜீனா என்ற பாடகி அவர் ஒருவரே பழைய பாடல்கள் புதுப் பாடல்கள் அனைத்தையும் மிகச் சீராகப் பாடி ,சிறப்பாகப் பாடி கை தட்டல் பெற்றார் .இசை நிகழ்ச்சியின் சிறப்பை உணர்ந்து சிலர் நன்கொடையும் வழங்கினார்கள் .முருகபாரதி ஒருவர் மட்டுமே பார்வை உள்ளவர் .மற்ற இசைக் கருவிகள் முழுவதையும் வாசித்தது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். குறைந்த அளவு இசைக் கருவிகளுடன் மிகச் சிறப்பான இசையை வழங்கி அசத்தினார்கள் .
அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் திரு .சிவகாசி குமாரின் பல குரல் நிகழ்ச்சி இசை நிகழ்ச்சி நடுவே மூன்று முறை நிகழ்த்தினார். முதல் முறையில் பறவை வன விலங்குகள் குரல் தந்து எல்லோரையும் காட்டில் இருப்பதுபோன்ற உணர்வைத் தந்தார். இரண்டாம் முறை பார்வையாளர்கள் கேட்கும் நடிகர் நடிகை குரலில் பேசி வியக்க வைத்தார் .மூன்றாம் முறை கையில் பொம்மையுடன் வந்து பொம்மையை பேச வைத்து பேசி நகைச்சுவை தந்தார். அனைவரும் திரு .சிவகாசி குமாரை மனம் திறந்து பாராட்டினர் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்திட திரு .பழனியப்பனுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது குடும்பமான அவரது அம்மா, மனைவி ,தம்பி திரு கோபி ,மகள் யாழினி என அனைவரும் விழாவிற்கு வந்து இருந்து சிறப்பித்தனர் .
நிகழ்ச்சியின் இறுதியில் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர்
மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்கள் நன்றி கூறினார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி தந்து பாராட்டி விட்டு விடை பெற்றனர் .பெரிய அளவில் நினைத்தபடி நன்கொடைச் சீட்டு விற்காவிட்டாலும் மனம் தளராமல் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்தினார் பழனியப்பன் .
வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது .பார்வையற்றவர்கள் இவ்வளவு சிறப்பாக சாதிக்கும் போது நாமும் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை விதைக்கும் விழாவாக அமைந்தது .
உங்கள் வீட்டு நிகழ்விற்கு அகவிழி இசை நிகழ்ச்சி நடத்தி ஆதரவு கொடுங்கள் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1.இராமவர்மா நகர் ,
3 வது தெரு ,
கோ .புதூர்,
மதுரை .625007.
தொலை பேசி 0452-2681877
அலைபேசி 9865130877
மின் அஞ்சல் trusteeagavizhi@gmail. com
இணையம் http://www.agavizhi.in/ html/
கருத்துகள்
கருத்துரையிடுக