மட்டை விளையாட்டில் இலங்கையோடு !
மட்டமாக விளையாடித் தோற்றதற்கு நன்றி !
தோல்வி உண்மையா ? பொய்யா ? என்பது !
தோற்றவர்கள் மட்டும் அறிந்த உண்மை !
ஒருவேளை பந்தையத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !
ஒருவேளை பணத்திற்காகவும் தோற்று இருக்கலாம் !
பார்வையாளர்களை முட்டாளாக்கி பிடித்த !
பந்தை தரையில் விட்டு தோற்றமைக்கு நன்றி !
இலங்கை விளையாட்டில் தோற்று இருந்தால் !
இஞ்சி தின்ன குரங்காக சிங்களன் மாறிடுவான் !
இனவெறி கொண்டு தமிழினத்தைத் தாக்கிடுவான் !
கோபத்தில் ஈழத்தில் தமிழர் உயிரை !
கொடூரன் பறித்துக் கொன்று இருப்பான் !
மூக்கு மேல் சினம் வந்து முட்டாள் சிங்களன் !
முள்வேலி அப்பாவிகளை முடித்து இருப்பான் !
வெறி கொண்டு தமிழர்களை ஒழித்திடுவான் !
வேதனையை மீனவருக்குப் பரிசாகத் தருவான் !
தமிழக மீனவர்களையும் சுட்டு வீழ்த்தி !
தண்ணீரில் தள்ளி விட்டு மகிழ்வான் !
தோற்ற கோபத்தில் காட்டுமிராண்டியாவான் !
தேற்ற ஆளின்றி எம் தமிழர் வாடி நிற்பர் !
எல்லை தாண்டியதாகக் கைது செய்திடுவான் !
எம்தமிழர் வலைகளைக் கிழித்து எறிந்திடுவான் !
இலங்கையை இந்தியா தோற்கடித்தபோது !
இழந்து இருக்கிறோம் தமிழர் உயிர்களை !
மட்டை விளையாட்டு வீரகளுக்கு நன்றி !
மானம் போனாலும் உயிர் மிஞ்சியதே !
கொடூரன் கோபப்படாமல் இருக்க இந்தியா !
கொஞ்சம் தோற்றுப் போனதற்கு நன்றி !
இப்போது மட்டுமல்ல கொடிய இலங்கையோடு !
எப்போது விளையாடினாலும் தோற்றிடுங்கள் நன்றி !
கொடூரனைத் தட்டிக் கேட்க நாதியில்லை !
கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க துணிவில்லை !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
கருத்துகள்
கருத்துரையிடுக