ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !ஹைக்கூ   ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

முன்னறிவிப்பு செய்தன 
மழையின் வருகையை 
இடி மின்னல் !

விழிகள் பேசும்போது 
மௌனமாகின்றன
இதழ்கள் ! 

கவிதைக்கு மட்டுமல்ல 
காதலிக்கும் இனிமை 
முரண் !

வீண் வேலை 
மரங்களை வீழ்த்திவிட்டு 
மழைக்கான பிராத்தனை !

செயற்கைச் செடிக்கும் 
தண்ணீர் ஊற்றினர் 
அழுக்கு நீக்க ! 

அறம் என்றால் 
என்ன என்றார் 
அரசியல்வாதி !

கருத்துகள்