ஹைக்கூ சென்றியு கவிஞர் இரா .இரவி !
பசியோடு இருக்கையில்
ரசிக்க முடியாது
இசை !
புகைத்தல் தீங்கு
குடித்தல் தீங்கு
படித்துவிட்டுத் தொடர்கின்றனர் !
மறந்து விட்டன
சிறகுகள் இருப்பதை
சோதிடக் கிளிகள் !
இரும்புச்சங்கிலி முயன்று தோற்று
சிறுகயிறு முயற்சிக்கவில்லை
கோயில் யானை !
தொட்டால் சிணுங்கி
இலை தோற்றது
அவளிடம் !
சிகப்பு வண்ணம் தந்தது
பச்சை இலை
மருதாணி !
தெரிகிறது
ஒளிரும் விளக்குகளில்
எடிசன் முகம் !
நிரந்தரமன்று
இரவு பகல்
துன்பம் இன்பம் !
விலைவாசி உயர்வு
அகவிலைப்படி அரசுப்பணியாளருக்கு
பொது மக்களுக்கு ?
.
அடிக்க வேண்டும்
கண்டுபிடித்தவனை
பணம் !
பசியோடு இருக்கையில்
ரசிக்க முடியாது
இசை !
புகைத்தல் தீங்கு
குடித்தல் தீங்கு
படித்துவிட்டுத் தொடர்கின்றனர் !
மறந்து விட்டன
சிறகுகள் இருப்பதை
சோதிடக் கிளிகள் !
இரும்புச்சங்கிலி முயன்று தோற்று
சிறுகயிறு முயற்சிக்கவில்லை
கோயில் யானை !
தொட்டால் சிணுங்கி
இலை தோற்றது
அவளிடம் !
சிகப்பு வண்ணம் தந்தது
பச்சை இலை
மருதாணி !
தெரிகிறது
ஒளிரும் விளக்குகளில்
எடிசன் முகம் !
நிரந்தரமன்று
இரவு பகல்
துன்பம் இன்பம் !
விலைவாசி உயர்வு
அகவிலைப்படி அரசுப்பணியாளருக்கு
பொது மக்களுக்கு ?
.
அடிக்க வேண்டும்
கண்டுபிடித்தவனை
பணம் !
கருத்துகள்
கருத்துரையிடுக