படித்ததில் பிடித்தது ! . போனது எங்கே? “கலையரசு” எஸ். எஸ். சர்மா – சிங்கப்பூர்


படித்ததில் பிடித்தது !
.
போனது எங்கே?

           “கலையரசு” எஸ். எஸ். சர்மா – சிங்கப்பூர் 

திங்கள் ஒன்றுக்கு மேல் 
இன்றுடன் (8-4—2014)
கடந்து போனது!
பெற்றவர் உற்றவர்
சுற்றம் சொந்தம்
போன இடம் புரியவில்லையே !
ஏங்கித் தவித்து
குமைந்து கொந்தளித்த
பந்தங்கள் இன்னும்
விடை காணாது
விம்மிக் குமுறுகின்றன!
இருப்போர் போனவர்
அவல ஓலக் குரல்கள்
எங்கும் எதிரொலித்து ஓய்ந்தன
பீஜிங் போக வேண்டிய
மலேசிய விமானப் பயணம்
விண்ணில் விசை ஒடுங்கியது
அவசர யுகத்தில்
விரைந்து போகும் வானூர்தி
தடம் மாறிப் போனது எங்கே?
அந்த  மர்மம் அறியாது
மறைந்த மாயம் தெளியாது
அகிலமே அல்லாடுகின்றது!
ஆழ்கடலை அலசுகின்றனர்
கணித்துக் கூறும் 
கறுப்புப் பெட்டி மின்கலனும் 
சைகை காட்டத் தவறியது!
சிங்கப்பூரில் இழந்த கைபேசியைக்  
காரைக்காலில் கண்டுபிடிக்க
உதவிய  ராடார்  சாதனம் 
எப்படி விட்டது தொடர்பை?
239 பேருடன் எம்எச் பிளைட்370 
நவீன போயிங் ஜெட்டு 
போன இடம் புரியலையே!
நள்ளிரவில் நடுவானில் 
நிகழ்ந்தது விபத்தா, கடத்தலா,
திட்டமிட்ட சதியா
தொழில் நுட்பத் தடங்கலா
ஓட்டுநரின் ஒழுங்கீனமா 
ஒண்ணுமே தெரியலையே சாமி!
பொறி இயல் அறிவியல்
அனைத்தும் ஆய்ந்தும்
அறிய முடியாத 
அதிசக்தியின் ஆற்றலை
விண்டுரைக்க வல்லார் யாரோ?
வெளிப்படுத்திடுவீர்!
    **********************

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


கருத்துகள்