ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! ( பார்வையற்றவர் ) நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
ஜெயிப்பது நிஜம் !
நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ ! md@acea2z.com
( பார்வையற்றவர் )
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
கிழக்கு பதிப்பகம் 177/103, முதல் தளம்
அம்பாள் கட்டிடம் ,லாயட்ஷ்சாலை ,ராயப்பேட்டை , சென்னை .6000014. விலை ரூபாய் 100.
இந்த நூலில் 17 கட்டுரைகள் உள்ளன.படிக்கும் வாசகர் மனதில் தன்னம்பிக்கை விதைக்கும் நூல் .நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ அவர்கள் புறப் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அல்ல அவரது மொழியில் சிறப்புத் திறனாளி ஆனால் அவருக்கு அகப் பார்வை ஆயிரம் உள்ளன என்பதை மெய்பிக்கும் நூல் இது . குறை ஒன்றும் இல்லை ,நூற்றுக்கு நூறு ,காலின் பலம், வானமே எல்லை, நினைத்தது நிறைவேறும் ,தட்டுங்கள் திறக்கப்படும் ,மனமிருந்தால் மார்க்கமுண்டு இப்படி கட்டுரைகளின் தலைப்புகளே தன்னம்பிக்கை தரும் விதமாக , சிந்திக்க வைக்கும் விதமாக , நேர்மை சிந்தனை விதைக்கும் விதமாக , உடன்பாட்டு சிந்தனை வளர்க்கும் விதமாக உள்ளன .பாராட்டுக்கள் .
.நூல் ஆசிரியர் இன்ஷ்பயரிங் இளங்கோ பற்றி சில வரிகள் .ACE PANACEA SOFTSKILLS ( www.acea2z.com) என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ,ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் ,பன்முகஆற்றல் மிக்கவர் ,புகழ்பெற்ற பல விளம்பரங்களில் இவர் குரல் ஒலித்துள்ளது ,சிறந்த பேச்சாளர் ,பல்வேறு விருதுகள் பெற்றுளார் .நல்ல நடை அறிவுரை போல இல்லாமலும் ,வாழ்க்கை வரலாறு போல இல்லாமலும் இயல்பான நடையில் உள்ளது .படிக்க விறுவிறுப்பாக உள்ளது . தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .
உலகில் ஒப்பற்ற உறவு அன்னை .அந்த அன்னை பற்றியும் குறிப்பிட்டு உள்ளார் .
.கல்லூரியில் படித்த காலத்தில் ராபர்ட் என்ற மாணவனால் ராக்கிங் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டக் காட்சி நெகிழ்ச்சி .நூல் ஆசிரியர் இளங்கோ பிறந்ததில் இருந்து பார்வை இல்லாதவர் .அவரை நீ அம்மாவை பார்த்து இருக்கிறாயா? அப்பாவை பார்த்து இருக்கிறாயா? உன்னை பார்த்து இருக்கிறாயா? சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரம் ,மலை ,அருவி ,நதி பார்த்து இருக்கிறாயா? இப்படி கேள்விகளால் காயப் படுத்த , அமைதியாக இருந்து இளங்கோவிடம் பேசாம தற்கொலை செய்து சாகலாம் என்று எண்ணுகிறாயா ? என்றபோது அவனிடம் ,
உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் என்கிறார் நூல் ஆசிரியர் இளங்கோ .இந்த மன நிலையை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் .பிறந்ததில் இருந்து பார்வை இல்லாத ஒருவர் போராடி படித்து, ஆங்கில மொழி சரளமாக பேசக் கற்று , பல கலைகள் கற்று ,பாடல்கள் பாடி ,விளம்பரத்திற்கு குரல் கொடுத்து, பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பயிற்சி நிறுவனம் நடத்தி சாதித்து வரும்போது இந்தக் குறையும் இல்லாத மனிதன் மனக் குறையோடு காலம் கழிப்பது முறையா ? இப்படி பல கேள்விகளை வாசகர் மனதில் எழுப்பி நூல் வெற்றி பெறுகின்றது .பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்று உணர்த்தும் நூல் இது .

ஆசிரியர் முன்னுரையில் உள்ள அறிஞர் அண்ணா சொன்ன கருத்து சிந்திக்க வைத்தது .
அறிஞர் சொன்ன மேற்கோள் , "பாருங்கள் உலகத்தில் எல்லா இடங்களிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் .மலேசியாவில்தான் தமிழர்கள் வாழ்கிறார்கள் " .அப்படித்தான் வாழ்தல் வேறு ,இருத்தல் வேறு .
"என் வாழ்க்கையில் என்னைப் படிக்க வைத்து இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் சமீபத்தில் மறைந்த என் தாயார் .எனக்கு எப்போதும் எல்லா நிலையிலும் உறுதுணையாக இருந்தவர் .அவருடைய போராட்ட குணம்தான் எனக்கும் வாய்த்திருக்கிறது .அதற்க்கு அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும் " .வரிகளைப் படிக்கும்போது வாசகர்களுக்கு அவரவர் அன்னை நினைவு வந்து விடும் .
.கல்லூரியில் படித்த காலத்தில் ராபர்ட் என்ற மாணவனால் ராக்கிங் என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டக் காட்சி நெகிழ்ச்சி .நூல் ஆசிரியர் இளங்கோ பிறந்ததில் இருந்து பார்வை இல்லாதவர் .அவரை நீ அம்மாவை பார்த்து இருக்கிறாயா? அப்பாவை பார்த்து இருக்கிறாயா? உன்னை பார்த்து இருக்கிறாயா? சூரியன் ,சந்திரன் ,நட்சத்திரம் ,மலை ,அருவி ,நதி பார்த்து இருக்கிறாயா? இப்படி கேள்விகளால் காயப் படுத்த , அமைதியாக இருந்து இளங்கோவிடம் பேசாம தற்கொலை செய்து சாகலாம் என்று எண்ணுகிறாயா ? என்றபோது அவனிடம் ,
"உனக்கு நன்றி சொல்கிறேன் .இதுக்கு முன்னாடி இரண்டு மூன்று தடவை தற்கொலை எண்ணம் வந்தது .ஆனா ,உன்னைப் பார்த்ததும் ,இந்த நிமிடத்தில் இருந்து அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன் .நான் வாழ்ந்து காட்டுகிறேன் .உன்னை மாதிரி மிருகங்களே வாழும் போது நான் ஏன் சாக வேண்டும் ."
திட்டமிட்டே சிலர் அவமானப் படுத்துவார்கள் .அதற்காக நாம் உடைந்து விடக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .
நூலில் உள்ளவற்றில் பதச் சோறாக இதைக் குறிப்பிட்டு உள்ளேன். நூல் முழுவதும் வாழ்தலின் அவசியத்தை சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும் நல்ல நூல் .
ஒவ்வொரு கட்டுரையின் முடிவுரை போல சில வரிகள் உள்ளன .சிந்துக்க வைக்கின்றன .
" ஒரு காரியத்தை உங்களால் செய்ய முடியாது என்று யாராவது சொன்னால் ,சொன்னவர்கள் மீது கோபப்படாமல் ,அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் ? ஏன் நம்மால் முடியாது ? நம்மிடம் இருக்கும் பலவீனம் என்ன ? என்றெல்லாம் யோசித்து .. மைனசை பிளசாக மாற்றுவதற்கு முயற்சி செய்தால் வாழ்க்கையே சுவாரஸ்யமாகி விடும் ."
இந்த நூல் படித்தபோது மதுரையில் புதூரில் அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தும் இனிய நண்பர் பார்வையற்ற மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் எம் .எ . அவர்கள் என் நினைவிற்கு வந்தார் . அவருக்கு பார்வை இருந்தது சிறு வயதில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது .பார்வை இழந்தோரின் துன்பம் உணர்ந்து துன்பம் போக்க விடுதி நடத்தி வருகிறார் .வருடா வருடம் ரத்த தானம் முகாம் நடத்தி வருகிறார் .கண் தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .மருத்துவ முகாம் நடத்தி வருகிறார் .இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் .பார்வையற்ற மாணவர்களுக்கு தொழில் பயிற்சியும் அளித்து வருகிறார் .
உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதன் நான் என்கிறார் நூல் ஆசிரியர் இளங்கோ .இந்த மன நிலையை ஒவ்வொரு மனிதனும் பெற வேண்டும் .பிறந்ததில் இருந்து பார்வை இல்லாத ஒருவர் போராடி படித்து, ஆங்கில மொழி சரளமாக பேசக் கற்று , பல கலைகள் கற்று ,பாடல்கள் பாடி ,விளம்பரத்திற்கு குரல் கொடுத்து, பிறருக்கு தன்னம்பிக்கை தரும் பயிற்சி நிறுவனம் நடத்தி சாதித்து வரும்போது இந்தக் குறையும் இல்லாத மனிதன் மனக் குறையோடு காலம் கழிப்பது முறையா ? இப்படி பல கேள்விகளை வாசகர் மனதில் எழுப்பி நூல் வெற்றி பெறுகின்றது .பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை .பிறந்தோம் சாதித்தோம் என்று உணர்த்தும் நூல் இது .
சொல்வது யாராக இருந்தாலும் கேளுங்கள் சரி என்றால் எடுத்து கொள்ளுங்கள் .அது விடுத்து எல்லாம் நமக்கு தெரியும் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள் என்று உணர்த்தும் நூல் ..
கருத்துகள்
கருத்துரையிடுக